Current Date:டிசம்பர் 22, 2024

நீரிழிவு நோய் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அனுபவிப்பதிலிருந்தும் தடுத்திட வேண்டாம்!
நீரிழிவுடையவராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் பயணிக்க நேரிடும் போதுரூபவ் சரியான திட்டமிடலின் மூலம்
அநாவசியமான உபாதைகளை தவிர்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:
 நீங்கள் பயணத்தை தொடங்கும் முன்ரூபவ் வைத்தியருடன் உங்களது வழக்கமான பரிசோதனைகளை எதிர்வரும் ஒரு
சில வாரங்களுக்கும் சேர்த்து மேற்கொள்ளுதல்.
 உங்கள் சுகாதார ஆலோசகர்களிடம் உங்கள் பயணத்தைப்பற்றிக் கலந்துரையாடி உங்கள் உணவு மற்றும்
மருந்துகளை தெளிவாக திட்டமிட்டுக்கொள்ளுதல்.
 தேவையான தடுப்பூசிகளை குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு முன்னராவது எடுத்துக்கொள்வதன் மூலம் அதன்
பக்கவிளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
 பரிந்துரைக்கப்பட்ட உங்கள் மருந்துகளின் பெயர்களை அவற்றின் கொள்ளளவுடன் உங்கள்
மருந்தாளரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருத்தல்.
 இன்சுலின் தடுப்பூசிகள் தேவைப்படுமிடத்துரூபவ் அவற்றின் விபரங்கள் அடங்கிய (விரைவாக
செயற்படும்ரூபவ் குறைவாக செயற்படும்ரூபவ் மத்திமமாக செயற்படும்ரூபவ் அல்லது நீண்ட நேரம் செயற்படும்)
ஒரு பிரதியை உடன் வைத்திருத்தல்.
 உங்கள் வைத்தியரிடமிருந்து உங்கள் மருந்துகளுக்கான அனுமதிக் கடிதத்தினை பெற்றுக்கொள்ளுதல். விமான
நிலையத்தில் பரிசோதனைகளின் போதுரூபவ் குறிப்பாக தடுப்பூசிகள் கையிலிருக்கும் பட்சத்தில் இந்த
அனுமதி தேவைப்படக்கூடும்.
 உங்கள் கைகால்களை நீட்டிக்கொள்வதன் மூலம் நீங்கள் உடலில் குருதிச் சுற்றோட்டத்தினை அதிகரித்து
உடலளவில் தெம்பாக இருத்தல்.
 உங்கள் உணவுரூபவ் உடற்பயிற்சிரூபவ் மருந்துகள் ஆகியவற்றை நேர அட்டவணைப்படி எடுத்துக்கொள்ளல்.
 ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையுமிடத்து விரைந்து செயற்படும்
சர்க்கரை மாத்திரைகளை உட்கொள்ளுதல்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன