கலோரிகளற்;ற இனிப்பூட்டியினைப் பாவிப்பது வழக்கமாக உட்கொள்ளும்; சீனிப்; பாவனையைக் குறைப்பதற்கு மிகவும் இலகுவான ஒரு வழியாகும். இதன் மூலம் இனிப்பு சுவையை கைவிட வேண்டிய அவசியம் இல்லை என்பதோடு குருதிச் சக்கரை அளவு கூடாதவாறு சில உணவுகளை உட்கொள்;வதும் சாத்தியமாகின்றது. மேலும், உடல் பருமன் அதிகரித்தவர்கள் தாம் உட்கொள்ளும் கலோரியின் அளவைக் குறைப்பதற்கும் இது உதவுகின்றது.
சுக்ரலோஸ் ஆனது சக்கரைக்குப் மாற்றாக ருளு குனுயு இனால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான சேமிப்புடனான பொதுப் பாவனை இனிப்பூட்டியாகும். வெப்பத்தினால் திரிபடைய முடியாத தன்மையினால் இது உணவுத் தயாரிப்பிலும் சூடான பானங்களிலும் பாவிக்கக் கூடியதாக உள்ளது. ஆயினும், அஸ்பார்ட்டேம் என்றழைக்கப்படும் இனிப்பூட்டியானது சர்ச்சைக்குரியதொன்றாகும். இது பல வகையான சுகாதார நிலைமைகளுடன் தொடர்புபட்டதாக ஊகிக்கப்படுவதுடன் கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் அல்லது பீனைல்கீட்டோனூரியாவினால் (Pமுரு) பாதிக்கப்பட்டவர்களுக்கும் உகந்ததல்ல. அதனால், உட்கொள்ளும் இனிப்பூட்டியைத் தெரிவு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
Share
மறுமொழி இடவும்