Current Date:செப்டம்பர் 12, 2024

யர் அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தமானது, சாதாரண நிலைமைகளிலுள்ள அளவுகளை விடவும் அதிகமான மற்றும் தொடர்ச்சியான அதிக உயர் அழுத்தம் மூலம் வரையறுக்கப்படுகிறது. இரத்த அழுத்தமானது, இரத்த ஓட்டத்தின் போது இரத்தக் குழாய்களின் சுவர்களில் செலுத்தப்படும் விசையாகும். இது, இரத்த அழுத்தமானி மூலம் அல்லது ஸ்பிக்மோமனோமீட்டர் மூலம் அளவீடு செய்யப்படக் கூடியது.

நமது இரத்த அழுத்தமானது இரு இலக்கங்களில் பதிவு செய்யப்படுகிறது:
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (முதலாவது இலக்கம்) – இது, இதயத் துடிப்பின் போது எவ்வளவு அழுத்தம் இரத்தக் குழாய்களின் சுவரின் மீது செலுத்தப்படுகிறது என்பதனைக் காட்டுகிறது.
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் (முதலாவது இலக்கம்) – இது, இதயத் துடிப்புகளுக்கு இடையில் எவ்வளவு அழுத்தம் இரத்தக் குழாய்களின் சுவரின் மீது செலுத்தப்படுகிறது என்பதனைக் காட்டுகிறது.
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் ≥140 (அஅர்ப) ஆக அல்லது டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் ≥90 (அஅர்ப) ஆக இருப்பின் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இரத்த அழுத்த வகைகள்
இரத்த அழுத்த வகை சிஸ்டாலிக் (அஅர்ப) டயஸ்டாலிக் (அஅர்ப)
உயர்ந்த இலக்கம் தாழ்ந்த இலக்கம்
சாதாரணம் 120 ஐ விடக் குறைவு மேலும் 80 ஐ விடக் குறைவு
உயர்த்தப்பட்டது 120 – 129 மேலும் 80 ஐ விடக் குறைவு
உயர் இரத்த அழுத்தம்
(உயர் அழுத்தம்) படி 1 130 – 139 அல்லது 80 – 89
உயர் இரத்த அழுத்தம்
(உயர் அழுத்தம்) படி 2 140 அல்லது அதிகம் அல்லது 90 அல்லது அதிகம்
உயர் இரத்த அழுத்த நெருக்கடி
(உடனடியாக வைத்தியரை நாடவும்) 180 ஐ விட அதிகம் மேலும்ஃஅல்லது 120 ஐ விட அதிகம்
காரணிகள்
பிரதானமான அல்லது முக்கியமான உயர் அழுத்தமானது காரணி அறியப்படாத ஒன்றாகும். இந்த வகையான உயர் அழுத்தத்திற்கு வழமையாக நீண்ட கால மருந்துப் பாவனை அவசியமாகும். ஆய்வுகளின் படி, உயர் அழுத்தத்தினால் பாதிப்படைந்தவர்களில் 10 இல் 9 பேர் பிரதானமான உயர் அழுத்தத்தினால் பாதிப்படைந்துள்ளனர்.
இரண்டாம் நிலை உயர் அழுத்தமானது ஏனைய வியாதிகளினால் தருவிக்கப்படுகிறது. இரண்டாம் நிலை உயர் அழுத்தத்திற்குக் காரணமான நிலைமைகளில் உள்ளடங்குவன: சிறுநீரகக் கோளாறு, தைராய்டு ஹார்மோன்களில் ஏற்படும் தாக்கங்கள், அதிரினற் சுரப்பியில் ஏற்படும் கோளாறுகள், கர்ப்பம் மற்றும் குறித்த சில மருந்து வகைகளின் பின் விளைவுகள்.
பிரதானமான உயர் அழுத்தத்திற்கு தெளிவான காரணங்கள் காணப்படாது. ஆயினும், ஒரு தனிநபரை இந் நிலைமைக்கு இட்டுச் செல்லும் காரணிகள் அதிகம் காணப்படுகிறது. அவையாவன:
60 வயதிற்கு மேல் இருத்தல்
குடும்ப அங்கத்தவர்களின் உயர் அழுத்த வரலாறு
மதுபானம் அருந்துதல்
அதிகம் கொழுப்புக் கொண்ட உணவுகளின் மேலதிக நுகர்வு
நீரிழிவு அல்லது உயர் கொழுப்பு போன்ற ஏனைய சுகாதார நிலைமைகள்
புகைத்தலுக்கு அதிகளவில் முகம் கொடுக்க நேரிடுதல்
மாதவிடாய் நிறுத்தம்
உடற் செயற்பாட்டுக் மற்றும் உடற் பயிற்சிக் குறைபாடு
மன அழுத்தம்
அறிகுறிகள்
அதிகமான உயர் அழுத்த நிலைமைகள் அறிகுறிகளின்றி வருவதால் அவை இரகசிய உயிர் கொல்லி என்றழைக்கப்படுகின்றன. பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற மோசமான சிக்கல்கள் ஏற்படும் போதே அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன. இரத்த அழுத்தத்தின் அளவு அதீதமாகக் கூடும் போது உயர் இரத்த அழுத்த நெருக்கடி ஏற்படலாம். இந் நிலைமை, சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 180 அஅர்ப ஐ விடக் கூடும் போதும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 120 அஅர்ப ஐ விடக் கூடும் போதும் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்த நெருக்கடியின் போது உக்கிரமான தலைவலி, உணர்வு நிலையிலிருந்து தவறும் வரையிலான உறக்க நிலை, வலிப்பு, திடீரென்ற பார்வை இழப்பு, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, வாந்தி, அல்லது அதிகப்படியான பதட்டம் போன்ற பல தரப்பட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.
மேலாண்மை
உயர் அழுத்தம், குறிப்பாக பிரதானமான உயர் அழுத்தம் குணப்படுத்தமுடியாததாகும். அதாவது, ஒரு முறை நோயறியப்பட்ட பின் வாழும் காலம் வரையிலும் தொடரக் கூடியதாகும். இருப்பினும், உயர் அழுத்தம் கட்டுப்படுத்தக் கூடியதொன்றாகும். உயர் அழுத்தம் கொண்டவர்களின் இரத்த அழுத்த அளவுகள், சாதாரண நபர் ஒருவரின் இரத்த அழுத்தத்தை விடவும் வேறுபாடற்ற அளவுகளில் பொருத்தமான மேலாண்மை மூலம் பராமரிக்கக் கூடியதாகும்.
உயர் அழுத்தத்திற்கான மேலாண்மையானது:
வழக்கமான சோதனைகளும் மருத்துவரின் ஆலோசனைகளைப் பின் தொடர்தலும். ஆரம்பத்தில் 1 – 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரைக் காணுதலும் பின்னர், உயர் அழுத்தத்தின் சிக்கல்களைக் கண்கள், இதயம்; மற்றும் ஏனைய உறுப்புகளிலும் பரிசோதிக்கவும் வருடத்திற்கு ஒரு தடவை மருத்துவரைக் காணுதல் சிறப்பாகும். மேலும், இரத்த அழுத்தமானி ஒன்றை வீட்டில் வைத்திருந்து தொடர்ச்சியாக இரத்த அழுத்தத்தை மேலாண்மை செய்வதும் பயனளிக்கக் கூடியதாகும்.
பொருத்தமான மருந்துகளை வழக்கமாக உட்கொள்ளுதல். உயர் அழுத்தத்திற்கான மேலாண்மைக்கு பல வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவையாவன: தியோசைடுகள், ஆஞ்சியோடென்சின் மாற்றும் என்சைம் தடுப்பான்கள் (யுஊநு-ஐ), ஆஞ்சியோடென்சின்-ஐஐ ஏற்பி தடுப்பான்கள் (யுசுடீ), கல்சியம் கால்வாய் தடுப்பான்கள் (ஊஊடீ), மற்றும் டையூரிடிக்ஸ். மருந்தின் வகையும் அளவும் மருத்துவரினால் நிர்ணயிக்கப்படுவதோடு ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உள்ளெடுக்கப்பட வேண்டும். சுயமாக மருந்தைத் தீர்மானிப்பதைத் தடுப்பது மிக முக்கியமானதாகும். மருந்துச் சீட்டுகளுக்கு அமைவாக மாத்திரமே மருந்துகள் உள்ளெடுக்கப்பட வேண்டும்.
சரியான வகை மற்றும் அளவுகளில் மாப்பொருள், புரதம். காய்கறிகள், பழங்கள் மற்றும் நீர் போன்றவை உள்ளடங்கலான சீரான உணவுகளைப் பேண வேண்டும். சக்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமாக உள்ளடங்கிய உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆய்வுகளின் படி, 4 மேசைக் கரண்டிக்கு அதிகமான சக்கரையும், 1 தேநீர்க் கரண்டிக்கு அதிகமான உப்பும், 5 மேசைக் கரண்டி அளவு கொழுப்பும் உயர் அழுத்தத்திற்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்யும்.
பாதுகாப்பான உடற் செயற்பாடுகளை மேற்கொள்ளவும். இது, உயர் அழுத்தத்தினைத் தடுப்பதற்காகவும் மேலாண்மை செய்வதற்காகவும் பரிந்துரைக்கப்படுவதாகும். ஓவ்வொரு பயிற்சியும் 30 நிமிடங்கள் கொண்டதாகவும் வாரத்திற்கு 5 நாட்கள் செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
புகைத்தலையும், மதுபானத்தையும் ஏனைய புற்றுநோயையும் தவிர்த்தல். இது இரத்தக் குழாய்களை ஒடுக்குவதுடன் உயர் அழுத்தத்தினை மோசமாக்கக் கூடியது. அதனால், உயர் அழுத்தம் கொண்டவர்கள் புகைத்தலைக் கைவிடுவதோடு, சிகரெட் புகையுள்ள இடங்களில் இருப்பதையும் மதுபானம் அருந்துதலையும் தவிர்க்க வேண்டும்.
தடுப்பு
உயர் அழுத்தத்திற்கான மேலாண்மை போன்று, இந் நோய்கக்கான தடுப்பும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பேணுதல், உகந்த உடல் பருமனைப் பேணுதல், வழக்கமான உடற் செயல்முறைகளை மேற்கொள்ளுதல், செயல் மற்றும் செயலற்ற சிகரெட் புகைத்தலைத் தவிரத்தல் போன்றவற்றால் செயற்படுத்தக் கூடியதாகும்.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன