Current Date:டிசம்பர் 22, 2024

குருதிச் சக்கரைக் குறைவு

ல வகையான காரணங்களினால் நாளாந்தம் குருதிச் சக்கரையின் அளவு கூடிக் குறையும் தன்மையைக் காட்டுகினறது. இது
உங்களால் வேறுபடுத்தியறிய முடியாதளவிற்கு மிகவும் சாதாரணமானதொரு நிலைமையாகும். ஆயினும்ரூபவ்
சுகாதாரமான அளவுகளை விடவும் குருதிச் சக்கரையின் அளவு குறைந்து செல்வதாலும்ரூபவ் உடனடியாகச் சிகிச்சை
பெற்றுக் கொள்ளாமல் இருப்பதினாலும் இந் நிலைமையானது மிகவும் அபாயகரமாக மாறக் கூடும். சாதாரணமான
அளவுகளை விடவும் குருதிச் சக்கரையின் அளவு குறைந்து செல்லும் நிலைமை ஹைப்போகிளைசீமியா என
அழைக்கப்படுகிறது. பொதுவாக இந் நிலைமை குருதிச் சக்கரையின் அளவு 70 அபஃனடு ஐ விடவும் குறைந்து செல்லும்
போது ஏற்படுகின்றது. உங்களது நிலைமைகளுக்கு ஏற்றதான குறைந்த அளவை வைத்தியரிடம் ஆலோசித்து அறிந்து
வைத்திருத்தல் அவசியமாகும். ஹைப்போகிளைசீமியா என்பது சுகாதாரப் பிரச்சினைகள் உருவாவதற்கானதொரு
சுட்டிக்காட்டியே அன்றி அது ஒரு தனிப்பட்ட நோயல்ல. குறைந்தளவிலான குருதிச் சக்கரையானது இன்சுலின்
எதிர்வினை அல்லது இன்சுலின் அதிர்வாகவும் இருக்கலாம்.

ஹைப்போகிளைசீமியா உருவாவதற்கான காரணங்கள்
இது பொதுவாக நீரிழிவுடையவர்களுக்கு உருவாவதாயினும்ரூபவ் நீரிழிவற்றவர்களுக்கு உணவு உட்கொண்ட பின்
உடலானது அதிகப்படியான இன்சுலினை சுரப்பதின் மூலம் உருவாகிறது. ஆகையால்ரூபவ் இது எதிர்வினை
ஹைப்போகிளைசீமியா என்றழைக்கப்படும். பொதுவாக இந் நிலைமைரூபவ் உணவு உட்கொண்ட சில மணித்தியாலங்களின்
பின் அல்லது நீரிழிவிற்கான முன்கணிப்பு நிலைமைகளில் அல்லது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த
பின் அல்லது அரிய வகையான என்சைம் கோளாறுகளால் ஏற்படுகின்றது. எதிர்வினை
ஹைப்போகிளைசீமியாவானது நீரிழிவிற்கான ஒரு ஆரம்பநிலை அறிகுறியாகவும் இருக்கலாம். மேலும்ரூபவ்
இதன் மற்றுமொரு வகையானதுரூபவ் நோய் நிலைமைகள் அல்லது குறித்த மருந்துகளை உட்கொள்வதுடன் தொடர்பான
உண்ணாவிரத ஹைப்போகிளைசீமியா என அழைக்கப்படுகிறது. இது உருவாவதற்குரூபவ் நீங்கள் நீரிழிவுடையவராக
இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந் நிலைமையைத் தூண்டும் காரணங்களாவன: சல்பா மருந்துகள் (அஸ்பிரின்
போன்றவை)ரூபவ் அளவுக்கதிகமாக மதுபானங்கள் அருந்துதல்ரூபவ் நுரையீரல்ரூபவ் சிறுநீரகம்ரூபவ் இதயம் மற்றும்
கணையத்தில் ஏற்படும் நோய்கள்ரூபவ் ஒரு சில ஹார்மோன்களின் அளவுக் குறைபாடு மற்றும் கணையத்தில்
உருவாகும் கட்டி போன்றனவாகும்.

மாறாகரூபவ் நீரிழிவுடையவர்களில் ஹைப்போகிளைசீமியா உருவாவதற்கான காரணங்களாவன: நீரிழிவு
மருந்துகள்ரூபவ் மதுபானம் மற்றும் அல்லோபுரினோல்ரூபவ் புரோபெனசிட்ரூபவ் வார்ஃபரின் போன்ற மருந்து
வகைகள்.
பொதுவாக ஹைப்போகிளைசீமியா உண்டாவதற்கான காரணங்களாவன:
 மேலதிகமாக இன்சுலின் மற்றும் மருந்துகளைப் பாவித்தல் (இந் நிலைமை நீங்கள் உட்கொண்ட உணவின்
அளவு இன்சுலின் தேவையுடன் பொருந்தாத போது ஏற்படுகிறது)
 சாதாரணச் சக்கரை உணவுகளின் மேலதிகமான நுகர்வு
 போதிய அளவிலும் உணவு உட்கொள்ளாதிருத்தல் மற்றும் ஒழுங்கற்ற முறைகளில் உணவு உட்கொள்ளுதல்
 வெறும் வயிற்றில் மதுபானம் அருந்துதல்
ஹைப்போகிளைசீமியாவின் அறிகுறிகள்
ஹைப்போகிளைசீமியாவின் தீவிரத் தன்மை மற்றும் நீடிக்கும் காலத்தையும் கொண்டு இதற்குப் பலவகையான
அறிகுறிகள் காணப்படுகின்றன. அவையாவன:
 பசி
 நடுக்கம்
 பதட்டம்
 வியர்த்தல்
 வெளிறிய தோல்
 விரைவானதும் ஒழுங்கற்றதுமான இதயத் துடிப்பு
 தூக்கம்
 தலைவலி
 எரிச்சல்
 குழப்பம்
 மங்கலான பார்வை
 தூக்கமின்மை
 மயக்கமாதல்
 உணர்விழத்தல்
 வலிப்புத்தாக்கங்கள்

சிகிச்சை முறைகள்
சக்கரையை அளவாக உட்கொள்வதன் மூலம் ஹைப்போகிளைசீமியாவினைக் கட்டுப்படுத்தலாம். இந் நிலைமையிலுள்ள
நீரிழிவு கொண்ட ஒருவர் உட்கொள்ளக் கூடிய மாப்பொருளின் அளவு 15-20 கிராம்கள் ஆகும். 15
நிமிடங்களின் பின்னும் இந் நிலைமை நீடித்தால் வைத்தியசாலைக்குச் செல்வது அவசியமாகும். அடிக்கடி
ஹைப்போகிளைசீமியாவினால் பாதிக்கப்படும் நீரிழிவு கொண்டவர்கள் சக்கரை வில்லைகள் அல்லது இனிப்புப்
பொருட்களை இருப்பில் வைத்திருப்பது சிறந்ததாகும். முக்கியமாகரூபவ் உங்களது சக்கரைத் தேவையின் காரணமாக இவற்றை
உள்ளெடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும். ஹைப்போகிளைசீமியாவினால் பாதிக்கப்பட்ட நீரிழிவற்றவர்களின்
நோய்க் காரணி அறியப்படாமல் சிகிச்சை செய்வது சிரமமாகும். உள்ளெடுக்கும் மருந்துகளின் காரணமாக
ஏற்படின்ரூபவ் வைத்தியரிடமிருந்து மாற்று மருந்து பெற்றுக் கொள்ள முடியும். கட்டிகள் ஏற்படுவதால் இந்
நிலைமை உருவாகும் போது அறுவை சிகிச்சை மூலமே சரிசெய்யப்பட முடியும். நோயாளர்கள் மயக்கமுறும்
சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைக்கு விரைவது அவசியமாகும்.
தடுப்பு முறைகள்
குருதிச் சக்கரையின் அளவுகளைச் சாதாரணமான அளவுகளில் பராமரிப்பதன் மூலம் ஹைப்போகிளைசீமியாவினைத்
தவிர்த்துக் கொள்ளலாம். நீரிழிவுடைவர்கள் பின்வரும் குறிப்புகள் மூலம் இதனைத் தவிர்த்துக் கொள்ளலாம்:
 முறையாக 3 வேளை உணவுகளையும் உட்கொள்வதோடு இடையிடையே சிற்றுண்டிகளையும் உட்கொள்ளுதல்
 உணவு உட்கொண்ட பின் 30 அல்லது 60 நிமிடங்களுக்கு உடற் பயிற்சி செய்வதோடு உடற்
பயிற்சியின் முன்னும் பின்னும் குருதிச் சக்கரையின் அளவைப் பரிசோதித்தல் வேண்டும்
 இன்சுலின் பாவிக்கும் போது அவதானமாக இருப்பதோடு இன்சுலின் அளவுகளிலும் அவதானமாக இருத்தல்
வேண்டும். வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை மாத்திரம் உள்ளெடுக்கவும்
 மதுபானம் உட்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளவும்
 குருதிச் சக்கரையின் அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளவும்

நீங்கள் நீரிழிவினால் பாதிக்கப்படாதவராயின் சில மணித்தியாலங்களுக்கு ஒரு முறை சிறிய அளவுகளில்
உணவு உட்கொள்வதன் மூலம் ஹைப்போகிளைசீமியாவினைத் தவிர்த்துக் கொள்ளலாம்;. உங்களது உணவுகளில் அதிகளவு
புரதம்ரூபவ் கொழுப்பு மற்றும் நார்ப்பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும்ரூபவ்
அளவுக்கதிகமாக சக்கரை கொண்ட உணவுகளை முழுதாகத் தவிர்த்துக் கொள்ளவும். நீரிழிவற்றவர்களுக்குக் குறைவான
கிளைசெமிக் கொண்ட மாப்பொருட்கள் மிகவும் சுகாதாரமானதாகும்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன