Current Date:ஏப்ரல் 19, 2024

நீரிழிவின் வகைகள்

நீரிழிவில், 4 பிரதான வகைகள் உள்ளன:

ப்ரீ டயபடிஸ் எனும் நீரிழிவுக்கு முந்திய நிலை அல்லது விளிம்பு நிலை என்பது நீரிழிவிற்கான முற்கூட்டிய எச்சரிக்கை அறிகுறி எனலாம். இது, குருதிச் சக்கரை அளவு சாதாரண நிலையை விட அதிகமாக ஆனால் நீரிழிவு நிலை எனும் அளவை விட குறைவாக உள்ள நிலையாகும். இங்கே இன்சுலின் தேவையான அளவு உடலால் சுரக்கப்படாத நிலையோ அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும் நிலையோ காணப்படலாம்.

முதலாவது வகை நீரிழிவு அதாவது இன்சுலின் சார்ந்திருக்கும் நீரிழிவு என்பது கணையம் இன்சுலினைச் சுரக்காமையால் ஏற்படும் கடுமையான வகையான நீரிழிவு ஆகும். சாதாரணமாக நாற்பது வயதுக்கு முன் ஏற்படும் இது, குழந்தைகளையும் வாலிபப் பருவத்தினரையும் பாதிக்கிறது.

இரண்டாவது வகை நீரிழிவு அதாவது இன்சுலின் சாராத நீரிழிவு என்பது செல்களால் சுரக்கப்படும் இன்சுலின் சரியாகச் செயற்படாத நிலை அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதாத நிலையாகும். இது நாற்பது வயதின் பின் ஏற்படுகிறது. இந்நிலை உள்ளவர்கள் இன்சுலினை எதிர்க்கும் வகையினாரகக் கருதப்படுகிறார்கள்.

கர்ப்பகால நீரிழிவு என்பது கருவுற்ற நிலையில் குருதிக் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பதாகும். கர்ப்பம் தரித்த பெண்ணின் உடலால் சுரக்கப்படும் ஹோர்மோன்கள் பெரும்பாலும் கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இன்சுலினைத் தடுக்கின்றன. இந்நிலை மகப்பேற்றின் பின் நீங்கினாலும், பிற்காலத்தில் இரண்டாவது வகை நீரிழிவு ஏற்றபடும் வாய்ப்புக்கள் உள்ளன.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன