பயனுடைய உடற் பயிற்சிகள் எடுபகுதி: வீட்டில் சுறுசுறுப்பாக இருக்க சில உதவிக் குறிப்புகள் வகைப்படுத்தல்: நீரிழிவைத் தடுப்போம் உள்ளடக்கம்:
உடற் பயிற்சி கூடங்களில் பதிவு செய்து கொள்ளவோ விலை உயர்ந்த விளையாட்டு உபகரணங்களையோ ஆடைகளையோ வாங்க வேண்டிய தேவையே இல்லாது, வீட்டிலிருந்து கொண்டே உடலை வலிமையாக வைத்துக் கொள்வது சாத்தியமானதாகும்.
உடற் பயிற்சியின் முக்கியத்துவம்
தவறாது உடற் பயிற்சி செய்வது நமது உடலின் செயற்பாடுகளை மேம்படுத்துகின்றது. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கச் செய்து இன்சுலினை திறம்பட செயல்படச் செய்து குருதிச் சக்கரையினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. இது நமது உடல் பருமனையும் இதய சுகாதாரத்தையும் பராமரிக்க உதவுவதோடு அல்லாமல் உடலை வலிமையாகவும் அதிகம் வளைந்து கொடுக்கத் தக்கதாகவும் வைத்திருக்க உதவுகிறது. வாரத்திற்கு 4-5 தடவைகள் 30 நிமிடம் ஏரோபிக்ஸ் போன்ற முழு உடற் பயிற்சி செய்வது சிறப்புமிக்க மற்றும் பலனுள்ள ஆரம்பமாக இருக்கும்.
வீட்டில் மேற்கொள்ளக் கூடிய விளையாட்டுகள்
உடற் பயிற்சி செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன் வைத்தியரிடம் ஆலோசனை பெறுவது இதற்குரிய முதலாவது அடியாக இருக்கும். இதற்கு முன்னதாக நீங்கள் உடற் பயிற்சி செய்திராவிடின் மெதுவாக ஆரம்பிப்பது சிறந்ததாகும். முதன்முறையாக ஒரு உடற் பயிற்சி முறையை முயற்சி செய்யும் போது, உடற் பயிற்சிக்கு முன்னதாகவும், ஓய்வு நிலையிலும், பின்னதாகவும் குருதிச் சக்கரையின் அளவை அறிந்து கொள்வது
அவசியமாகும். இது, உடற் பயிற்சி எவ்வாறு உங்களின் குருதிச் சக்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நிர்ணயம் செய்ய உதவும். நீர் உட்கொள்தோடு அல்லாமல் சுகாதாரமான சிற்றுணவுகளையும் தயார் செய்து வைத்திருப்பது குருதிச் சக்கரையின் அளவு பெரிதாகக் குறையும் போது உட்கொள்ள உதவும்.
வீட்டில் தவறாமல் உடற் பயிற்சி மேற்கொள்ள சில உதவிக் குறிப்புகள்
- 5 நிமிடங்களுக்குத் உடலை சூடேற்ற இலகுவான பயிற்சிகளை மேற்கொள்ளவும். தீவிரம் குறைந்த நடனப் பயிற்சிகளை முயற்சி செய்யலாம்.
- இயங்க ஆரம்பிக்கவும். கைத் தசைகளை அசைக்கும் பயிற்சி, துடுப்புப் போடுதல் போன்ற அசைவுகளை சேர்த்துக் கொள்ளவும். ஐந்து நிமிடங்களுக்கு இவற்றைச் செய்யவும்.
- அடுத்த 5 நிமிடங்களுக்கு இடவசதியுள்ளபடி சிறிது ஓட்டப் பயிற்சி அல்லது குதித்தல் பயிற்சி செய்யவும் பின்னர் சிறிது வேகத்தை அதிகரிக்கவும்.
- இரண்டு நிமிடங்களுக்கு உங்களுக்குப் பிடித்த துள்ளிசைப் பாடலை ரசித்தவாறு வேகமாக ஓடவும். நீங்கள் புதிதாக மீண்டும் பயிற்சியை ஆரம்பித்திருந்தால் சில வாரங்களுக்கு இந்தக் கட்டத்தை தவிர்க்கலாம்.
- மெதுவாக வேகம் குறைக்கவும். மீண்டும் மெதுவாக ஓரே இடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஓடவும்.
- இப்போது சக்தியைக் கட்டியெளுப்பும் பயிற்சிகளைச் செய்யலாம். சுவரில் சாய்ந்து 20 புஷ் அப்கள் அல்லது அமர்ந்த நிலையில் 20 ரோவிங்; அல்லது 20 ஹாப் ஸ்கொட்ஸ் செய்யலாம்.
வீட்டில் மேற்கொள்ளும் உடற் பயிற்சிகளை மேலும் உற்சாகமாக்க சில உதவிக் குறிப்புகள்
- அதிக துடிப்புக் கொண்ட பாடல்கள் சகலவிதமான பயிற்சிகளையும் மேற்கொள்ளத் தேவையான செயல் நோக்கத்தினை வழங்கும்.
- விருப்பத்திற்கு உகந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அல்லது திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டவாறு பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.
- சலிப்புத் தன்மையைத் தவிர்த்துக் கொள்ள நாளாந்தம் வெவ்வேறு விதமான அசைவுகளை முயற்சி செய்யவும்.
இதன் மூலம், தவறாமல் உடற் பயிற்சி செய்து கொண்டு சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் எளிதானதாகும். இவை யாவும், நாம் போதுமான முயற்சிகளையும் மேற்கொண்டு, உடலை நன்றாகப் பராமரிக்க எடுத்துக் கொள்ளக் கூடிய நேரங்களையும் பற்றிய விடயமாகும்.
மறுமொழி இடவும்