Current Date:ஜனவரி 22, 2025

அபாயக் காரணிகள்

வகை 2 நீரிழிவினை விருத்தியாக்க வழிவகுக்கும் அபாயக் காரணிகள் பல உள்ளன. ஒரு சில அபாயக் காரணிகள் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்படுவதாயினும் வகை 2 நீரிழிவானது வாழ்க்கை முறையை மாற்றம் செய்வதன் மூலம் பெருமளவிற்கு தாமதிக்கக் கூடியதாகவோ அல்லது தடுத்துக் கொள்ளக் கூடியதாகவோ இருக்கிறது.

அபாயக் காரணிகளை அறிந்து கொள்வதன் மூலம் நீரிழிவினைத் தடுப்பதற்கான முதலாவது அடியை எடுத்துவைக்க
முடியும்.

காரணிகளாவன –

  • உடல் பருமனாகவோ அல்லது அதிக எடையுடன் இருப்பது
  • குடும்பத்தில் உள்ளவர்களின் நீரிழிவு சம்பந்தமான வரலாறு
  • ஆரோக்கியமற்ற உணவுகள்
  • இனத்திற்குரிய பின்னணி
  • உடல்ரீதியாக செயலற்ற தன்மையும் சரீர உழைப்பில்லாத வாழ்க்கை முறையும்
  • அதிகரித்துச் செல்லும் வயது, வழக்கமாக 40 இற்கு மேல்
  • அதிகக் குருதி அழுத்தம்
  • கர்ப்பகால நீரிழிவு வரலாறு
  • நீரிழிவு முன் நிலை (பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத் தன்மை – சாதாரணமான குருதி குளுக்கோஸ் அளவை விட அதிகமானதாயினும் நீரிழிவைக் கண்டறியக்கூடிய அளவினை விடவும் குறைவானது)

வகை 2 நீரிழிவினை விருத்தியாக்க வழிவகுக்கும் அபாயக் காரணிகளுள் மிகவும் பொதுவானதும் முற்று முழுதாகத் தடுக்கப்படக் கூடியதுமான காரணிகளாவன அதிகளவிலான துரித உணவுப் பழக்கவழக்கங்களும் குறைந்தளவிலான உடல் செயற்பாடுகளுமாகும்.v

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன