Current Date:நவம்பர் 21, 2024

உங்களது சுகாதாரத்தைக் கண்காணித்தல்

நீரிழிவைப் பற்றிக் கவனத்திற் கொள்ள வேண்டியது குருதிச் சக்கரையின் அளவுகளில் அக்கறை கொள்வது
மட்டுமல்ல. உயர்த்தப்பட்ட குருதிச் சக்கரையின் அளவுகள் உடலின் பல பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால்ரூபவ்
பல தரப்பட்ட சுகாதாரச் சுட்டிகளை வழக்கமாகப் பரிசீலித்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். எவ்வளவு கால
இடைவெளிகளில் சம்பந்தப்பட்ட உடற் பாகங்களையும் சுகாதார அளவுருக்களையும் பரிசீலித்துக் கொள்ள வேண்டும்
என்பது பற்றிய அறிவுறுத்தல்களை உங்களது வைத்தியர் உங்களுக்கு வழங்குவார்.
வழக்கமாக குருதிச் சக்கரையின் அளவுகளோடு பரிசீலித்துக் கொள்ள வேண்டிய ஏனைய சோதனைகள்:
 இரத்த அழுத்தம்
 உடற் பருமனும் இடைச் சுற்றளவும்
 கொழுப்பின் அளவுகள்
 இதயச் சுகாதாரம்
 கண்கள்
 சிறுநீரகம்
 பாதங்கள் (நாளாந்தம் பாதங்களைப் பரிசீலித்துக் கொள்வதன் மூலம் மோசமாக ஆறக் கூடிய
காயங்கள் காரணமாகக் கால்களை துண்டித்தல் போன்ற பாரிய சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்)

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன