Current Date:ஜனவரி 21, 2025

உணவு லேபிள்களை விளங்கி அறிதல்

உணவு லேபிள்கள் என்றால் என்ன?

ஏன் அவை அவசியம் என்பதனைப் பற்றிப் பார்க்கலாம்.

இப்போது, எம்மில் பலர் உணவு லேபிள்களை சரிபார்ப்பதில்லை, அத்துடன் அது மிகுந்த சவாலான பணியாகவும் மாறியிருக்கின்றது. எனினும் உணவுப் பொருளில் உள்ளடங்கியிருப்பவற்றை கற்பனை மூலமாக அறிந்துகொள்ள முடியாது. ஆகையால் தான் உணவு லேபிள்களை சரிபார்ப்பது என்பது மிகவும் அவசியமானகும்.
உணவுப் பெருளில் உள்ளடங்கியிருப்பவை பற்றிய சாராம்சத் தகவலானது உணவு லேபிளில் தான் காணப்படும். இந்த உணவு லேபில்களை அவதானிப்பதன் மூலம் மிக இலகுவாக எமக்குத் தேவையான உணப்பொருட்களைத் தெரிவு செய்யமுடியும். ஆரோக்கியமான உணவினை நுகர்வதற்கான முதல் படி இதுவாகும்.

எவ்வாறு உணவு லேபளிளை அணுகுவது?

  1. உட்கொள்ளும் அளவு – இதில் தவறு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. காரணம் நாம் உண்ணும் உணவின் உண்மையான அளவு பொதுவாக பக்கேஜிங்கில் (லேபலில்) குறிப்பிடப்பட்ட அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது குறிப்பிட்ட கலோரி மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அளவானது நீங்கள் உட்கொண்ட உணவின் அளவிற்கு ஏற்ப மாறுபடும்.
  2. கலோரிகள் – ஒரு முறை நீங்கள் உட்கொள்ளும் உணவின் மூலம் கிடைக்கப்பெறும் கலோரிகளே உங்கள் சக்திக்கு காரணமாகின்றது. எனினும், நாம் உட்கொள்ளும் உணவின் மூலமான கலோரிகள் பல சந்தர்ப்பங்களில் அதிகமாக இருப்பதால் அவை உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கின்றது.
  3. ஊட்டச்சத்துகள் – முழுமையான கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் போன்ற சில ஊட்டச்சத்துக்களைக் குறைப்பதன் மூலம் அதிக கலோரிகளைத் தவிர்த்திடலாம். அதற்கு பதில் நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ள உற்பத்திகளை நீங்கள் நுகர்வுசெய்வது சிறந்தது.
  4. % சதவீத அடிப்படை – குறித்த உற்பத்தியினை ஒரு தடவை உட்கொள்ளும் போது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தின் அளவானது சதவீத அடிப்படையில் குறிப்பிடப்பட்டிருத்தல். உங்கள் ஊட்டச்சத்து தேவையின் அடிப்படையில் உணவுப்பொருட்களைத் தேர்வுசெய்யலாம்.
  5. தேவையான பொருட்கள் பட்டியல் – மூலப்பொருட்கள் இறங்கு வரிசையில் பட்டியலிடப்பட்டிருத்தல், காரணம் குறித்த உற்பத்தியில்; உள்ளடங்கியுள்ள மூலப்பொருளில் எவை அவசியமானது என்பதை உங்களால் ஒரே தடவையில் அறிந்து கொள்ள முடியும். அவசியமானதைப் பெற்றிடவும் தேவையற்றதை தவிர்த்திடவும் இது உதவும்.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன