Current Date:டிசம்பர் 21, 2024

குருதிச் சக்கரை அளவுகளைக் கண்காணித்தல்

நீரிழிவு மேலாண்மையின் பிரதான குறிக்கோளானது குருதிச் சக்கரையின் அளவைக் குறித்த இலக்கு எல்லைக்குள்
வைத்திருப்பதாகும். இது நீரிழிவு சம்பந்தமான மேலதிகச் சிக்கல்கள் வளர்ச்சியடையும் அபாயத்தைக் குறைக்கிறது.
இதனை அடைந்து கொள்ள சமநிலையான உணவுப் பழக்கம்ரூபவ் வழக்கமான உடற் செயன்முறைகள்ரூபவ் சுகாதாரமான வாழ்க்கை
முறை வழக்கங்கள் மற்றும் மருந்துகளாகும்.
தொடர்ச்சியாகக் குருதிச் சக்கரையின் அளவைக் கண்காணித்தல் நீரிழிவு மேலாண்மை எவ்வாறு
மேம்படுத்தப்படுகிறது என்பதற்கான புரிந்துணர்வை வழங்கும். இந்தத் தரவுகளைப் பரிசீலிப்பதால் காலப்
போக்கில் நீரிழிவு மேலாண்மைக்கான மிகவும் தாக்குதிறன் மிக்க உபாயங்களைக் கண்டறியலாம். இதனால்ரூபவ்
உங்களது குருதிச் சக்கரையின் அளவுகளுக்கான பதிவுகளை வைத்திருப்பதும் அதில் மாற்றங்கள் ஏற்படும் போது
அதற்கான காரணங்களை பதிவு செய்து வைத்திருப்பதும் மிக முக்கியமாகும்.
எந்த வகையான நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர் என்பதன் மூலம்ரூபவ் உட்கொள்ளும் மருந்துகள் மூலம்ரூபவ் உங்களது
உணவுப் பழக்கங்கள் மூலம் மற்றும் நீங்கள் மேற்கொள்ளும் உடற் பயிற்சிகள் மூலமும் நீங்கள்
எப்பொழுது மற்றும் எவ்வாறு குருதிச் சக்கரை அளவுகளைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்
என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதற்கான அறிவுரையை உங்களது வைத்தியர் உங்களுக்கு வழங்குவார்.
குருதிச் சக்கரை அளவுகளைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய மிகவும் பொதுவான
சந்தர்ப்பங்கள்:
 காலை உணவிற்கு முன்
 உணவிற்கு 2 மணித்தியாலங்களின் பின்
 உறங்கச் செல்வதற்கு முன்
 உடல்நலக் குறைவு ஏற்படும் சந்தர்ப்பங்களில்

வழக்கமாக பரிசோதனைகளை மேற்கொள்வது உங்களுக்குப் பயனளிக்கும் மற்றும் பயனளிக்காத செயற்பாடுகள்
பற்றிய தரவுகளை வழங்கக் கூடியதாக இருக்கும். உங்களது குருதிச் சக்கரையின் வாசிப்புகளானது உங்களது சிகிச்சை

முறைகளைத் தொடருவது மற்றும் மாற்றியமைப்பது பற்றிய தெளிவினை உங்களது சுகாதார ஆலோசகருக்கு வழங்கக்
கூடியதாக இருக்கும். இவை அனைத்தும் உங்களது நீரிழிவு மேலாண்மை முறைகளில் மிகவும் நம்பிக்கை கொள்ள உதவும்.

குருதிச் சக்கரையின் அளவுகளில் மாற்;றங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
சில சமயங்களில் உங்களது குருதிச் சக்கரை அளவுகளின் வாசிப்புகளை விளங்கிக் கொள்வது சிரமமாக இருக்கும்.
குருதிச் சக்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்களாவன:
 உணவுகளைத் தவிர்த்துக் கொள்வது அல்லது உணவு வேளைகளைப் பிற்போடுவது
 உங்களது உணவில் காணப்படும் மாப்பொருளின் வகைகளும் அளவுகளும்
 உடற் பயிற்சி
 மருந்துகளில் மாற்றம்
 மதுபானம்
 பிற நோய்கள்
குருதிச் சக்கரை அளவின் வாசிப்புகள் வழமையான வாசிப்புகளை விடவும் கூடுதலான அல்லது குறைவான அளவுகளைத்
தொடர்ந்து காட்டினால் உங்களது வைத்தியரை அணுகவும்.

வீட்டில் பரிசீலித்தல்
குருதிச் சக்கரை அளவினை வீட்டில் அல்லது பயணங்களில் பரிசீலித்துக் கொள்வது கடந்த காலங்களை விடவும்
தற்பொழுது மிகவும் இலகுவானதும் துல்லியமானதுமாகும்.
இதற்காக உங்களுக்குத் தேவைப்படுவது:
 குருதிச் சக்கரைமானி
 லான்செட்டுகள் கொண்ட லான்செட் சாதனம்
 பரிசோதனைத் தாள்கள்

அறிவுறுத்தல்கள்
1. கைகளைக் கழுவிய பின் பரிசோதனைத் தாளைக் குருதிச் சக்கரைமானியுட் செலுத்தவும்
2. லான்செட் சாதனம் கொண்டு விரல் நுனியிலிருந்து ஒரு துளி இரத்தத்தை எடுத்துக் கொள்ளவும்

3. குருதி பரிசோதனைத் தாளில் படுமாறு சிறிது நேரத்திற்கு அத்தாளைப் பிடித்திருக்கவும்
4. குருதிச் சக்கரைமானியில் உங்களது குருதிச் சக்கரையின் அளவு காட்டப்படும். வெவ்வேறு வகையான
சாதனங்கள் பயன்படுத்தும் போது அதன் பாவனை சம்பந்தமான அறிவுறுத்தல்களை நன்கு அறிந்து
கொள்ளவும்.
5. கைத் தொலைபேசியில் அல்லது உங்களது குறிப்பேடுகளில் இந்த வாசிப்புகளைப் பதிந்து கொள்ளவும்.
ர்டியு1உ
வீட்டில் செய்து கொள்ளும் பரிசோதனைகள் மூலம் நாளாந்தம் உங்களது குருதிச் சக்கரையின் வாசிப்புகளை
அறிந்து கொள்ளலாம். ஆயினும்ரூபவ் ர்டியு1உ வாசிப்புகள் மூலம் 2 – 3 மாதங்களுக்கு ஒரு முறை குருதிச்
சக்கரையின் அளவுகள் எவ்வாறு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம். இது வழக்கமாக
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மாத்திரமே செய்யப்படலாம்.
அளவுகளின் இலக்கு
குருதிச் சக்கரைக்கான அளவுகளின் இலக்கு உங்களது வயதுரூபவ் நீரிழிவுடன் வாழும் காலம்ரூபவ் எடுத்துக் கொள்ளும்
மருந்தின் வகைகள் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் தீர்மானிக்கப்படும்.
பொதுவாகரூபவ் நீரிழிவுடைய வகையினைக் கருத்திற் கொள்ளாமல் ர்டியு1உ இன் அளவினை 7.0மூ இற்குக் குறைவாக
வைத்திருப்பது சிறந்ததாகும். பொதுவாகரூபவ் நீண்ட கால அபாயங்களைக் குறைத்துக் கொள்ள இது மிகவும் உகந்த அளவு
இலக்காகும். உங்களது தனிப்பட்ட அளவு இலக்கை அறிந்து கொள்ள உங்களது வைத்தியரை அணுகவும்.

வாசிப்புகளை விளங்கிக் கொள்வதற்கான எளிய வழிகாட்டி
சிறந்த கட்டுப்பாடு நியாயமான கட்டுப்பாடு மோசமான
கட்டுப்பாடு
6.5 – 7.0மூ 7.0 – 8.0மூ 8.0மூ
இடையில் இடையில் இற்கு மேல்

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன