Current Date:ஜனவரி 28, 2025

சிறந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது எப்படி?

சிறந்த உணவுப் பழக்கவழக்கத்திற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

நாம் தினமும் உணவினை உட்கொள்கின்றோம், எனினும் நம்மில் பலர் நாம் எவ்வாறான உணவினை உட்கொள்கின்றோம் என்பதைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக்கட்டுப்பாடு சிறந்த முறையாக இருப்பினும் அதனை மிக அவதானமாக கையாள வேண்டும்;, அல்லாது போனால் இதய நோய் மற்றும் நீரிழிவு உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு அதுவே காரணமாகிவிடும். ஆகவே சிறந்த உணவுப் பழக்கவழக்கத்திற்கு மாறுவதற்கு முன், நம் உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

5 முக்கிய உணவுக் குழுக்கள் உள்ளன, எமது உணவானது இவ் 5 குழுக்களின் கலவையாக இருக்கும் பட்சத்தில், சுவையான உணவும் ஆரோக்கியமான வாழ்வும் கிட்டும்.
5 முக்கிய உணவுக் குழுக்கள்:
1. பழம் – பழங்கள் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. அதில் இயற்கையான சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளடங்கியிருப்பதனால் எளிதாக சிற்றுண்டி போன்று உட்கொள்ளலாம். நீங்கள் பலவகையான பழங்களை உண்ணப்பழகிக் கொள்ள வேண்டும். வெவ்வேறு வண்ணங்கள் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள்.
2. காய்கறிகள் – காய்கறிகளை பச்சையாக அல்லது சமைத்து உட்கொள்ள வேண்டும். அதிலும் உங்களது உணவில் பச்சைக் கீரையினை அவசியம் சேர்ப்பது நன்று. காய்கறிகளில் பிரதானமாக விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பழங்களைப் போலவே வெவ்வேறு வண்ணங்களையும், பல்வேறு காய்கறிகளையும் உணவில் சேர்க்கும் போது தான் போதியளவு ஊட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் மலிவாகவும் புதிதாகவும் கிடைக்கும். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தைக்கு செல்ல மறக்காதீர்கள்.
3. தானியங்கள் – சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால் செய்யப்படும் உணவுகள் சேர்க்கையானது அவை முழுப்பலனைத் தராது என்பதனை கவனத்தில்கொண்டு, முழுமையான தானியங்களை உணவில் சேர்ப்பதே சிறந்தது. இவ் மாற்றத்தினை செயற்படுத்தி நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களை பெற்றிடுங்கள்.
4. புரதம் – நமது உடலானது பிரதானமாக புரதத்தினால் ஆனது, எனவே நமது இயக்கத்திற்கு குறிப்பிட்ட அளவு புரதம் அவசியம் ஆகும். கொழுப்பு குறைந்த இறைச்சிகள், கோழியிறைச்சி, முட்டை, பால் என்பன புரதத்திற்கான சில தெரிவுகள் ஆகும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பலவகையான சேர்க்கைகளும் சுவையூட்டிகளும் கலந்திருப்பதனால் அது புரதத்திற்கான சிறந்த தெரிவாக அமையாது அத்துடன் அவற்றை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுங்கள். தாவரப் புரத மூலங்களை உட்கொளவதும் சிறந்தது.
5. பால் – பால் மற்றும் பால் மாற்றீடுகளில் அதிக கல்சியம் உள்ளடங்கியுள்ளது, இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளடங்கியுள்ள பால் உற்பத்திகளை தவிர்த்து, ஊட்டச்சத்து தேவைக்காக மட்டும் பால் உற்பத்திகளை உட்கொள்வது சிறந்தது.
இந்த ஐந்து உணவுக் குழுக்களும் உள்ளடங்கிய உணவே சமச்சீரான உணவு ஆகும். ஆகவே தற்போது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் ஒரு சமச்சீரான உணவில் எவையெல்லாம் உள்ளடங்கியிருக்க வேண்டுமென்று.
சமச்சீரான உணவு ஏன் முக்கியம் என்று நீங்கள் சிந்தித்தால், பின்வருவனவற்றை நினைவில் கொள்ளுங்கள்.

  • அன்றாட செயற்பாட்டிற்கு அவசியமான உடல் வலுவினை பெற்றுக்கொடுக்கும் உணவே        “சமச்சீரான” உணவு என்று அழைக்கப்படுகிறது.
  • சமச்சீர் உணவுப் பழக்கத்தினை இலகுவாக செயற்படுத்த ஊட்டச்சத்தின் அளவு குறைந்த துரித உணவுகளை உண்பதைத் தவிர்த்திடுங்கள்.
  • நோய்கள் மற்றும் சோர்வு ஏற்படாமல் சமச்சீரான உணவு உங்களைப் பாதுகாக்கின்றது.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன