ஒரு குழந்தையைப் பிரசவிப்பது வாழ்வின் ஒரு மகிழ்ச்சியான மைல்கல்லாக இருந்த போதும் கர்ப்ப காலத்தில்
நீரிழிவு நோயறியப்பட்டால் அது இன்னும் பிறக்காத குழந்தையின் சுகாதாரத்தைப் பாதிக்குமா?
ஆம். கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிக் காலகட்டத்தில் நீரிழிவின் காரணமாக உண்டாகும் குருதியின் அதிகக்
குளுக்கோஸ் அளவுகள் குழந்தையைப் பாதிக்கக் கூடியது. இதன் விளைவாக குழந்தையின் இதயத்திலும்ரூபவ் மூளையிலும்
மற்றும் முள்ளந்தண்டிலும் குறைபாடுகள் தோன்றுவதுடன்ரூபவ் உடல் பருமன் சிக்கல்களும் கடுமையான நிலைமைகளில்
கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறக்கும் தன்மை போன்ற நிலைமைகளும் உருவாகச் சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஆகையால்ரூபவ் மேலும் துரதிஷ்டவசமான நிலைமைகளை தவிர்த்து சுகாதாரமான குழந்தையைப் பிரசவிப்பதை உறுதி செய்து
கொள்வது எப்படி?
தயாராகுதல்
கர்ப்ப காலத்தில் உங்களது உடல் பல வகையான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. கர்ப்ப காலத்தில் உடலின்
பௌதீக மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் குருதிச் சக்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதன்
காரணமாக உங்களது உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள்ரூபவ் உடற் செயன்முறைகளில் ஒழுங்குரூபவ் மற்றும் இன்சுலின்
தொடர்பான மருந்துகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைக் கொண்டுவருவது சிறந்ததாகும். முன்னதாகவே
நீரிழிவுடையவராயின்ரூபவ் கர்ப்பத்திற்கு முன்பாகவோ கர்ப்ப காலத்திலோ குருதிச் சக்கரையின் அளவை
சாதாரண நிலைமைகளில் பேணுவதற்கு இது உதவுவதோடுரூபவ் குழந்தையின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த
உதவுகிறது. கர்ப்பத்திற்கு முன்பாகவும் கர்ப்ப காலத்திலும் உடல் பரிசோதனைகளை மேற்கொள்வதும்ரூபவ்
நீரிழிவின் போதான உணவுத் திட்டத்தைப் பேணுவதும்ரூபவ் வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு ஏற்றவாறு உடற்
செயன்முறைகளில் கவனம் செலுத்துவதும் பரிந்துரைக்கத்தக்கதாகும். மேலும்ரூபவ் குழந்தையின் பாதுகாப்பிற்காக
நீரிழிவு நிலைமைகளில் மட்டுமல்லாது சாதாரண நிலைமைகளிலும் புகைத்தலையும் மதுபானம் உட்கொள்வதையும்
நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எனது சுகாதாரத்தை நீரிழிவு பாதிக்குமா?
உங்களது குருதிச் சக்கரையின் அளவு அதிகமாக உள்ள சந்தர்ப்பங்களில்ரூபவ் பார்வைக் கோளாறு மற்றும்
சிறுநீரக் கோளாறு போன்ற நீரிழிவு சம்பந்தமான சிக்கல்களை கருத்தரித்தல் மோசமாக்கிவிடுகிறது. இது
கர்ப்பத்தின் இரண்டாம் பாதியில்ரூபவ் அதிகக் குருதி அழுத்தம் காரணமாக சிறுநீருடன் புரதம் வெளியாகும்
ப்ரீக்கிளம்சியா உருவாவதற்கு அதிக சந்தர்ப்பங்களை உண்டாக்குகிறது. இதுரூபவ் உங்களுக்கும் உங்களது குழந்தைக்கும்
சிக்கல்களை விளைவிக்கும். ப்ரீக்கிளம்சியாவினைத் தடுப்பதற்கான ஒரே வழி பிரசவமாகும்.
கருத்தரிப்பதற்கு முன்பாகரூபவ் அதிக குருதி அழுத்தம்ரூபவ் பார்வைக் கோளாறுரூபவ் சிறுநீரகப் பிரச்சினைகள்
மற்றும் நரம்புச்சிதைவுகள் போன்ற பிரச்சினைகளைச் சோதித்துக் கொள்வது சிறந்ததாகும். நீரிழிவு
சம்பந்தமான சில பிரச்சினைகளை கருத்தரித்தல் மோசமாக்கிவிடக் கூடியது. இந் நிலைமையைத் தடுப்பதற்காகரூபவ்
கருத்தரிப்பதற்கு முன்பாக உங்களது சிகிச்சையை சரி செய்து கொள்;ள உங்களது சுகாதாரக் குழு உங்களுக்குப்
பரிந்துரைகள் வழங்குவார்கள்.
நான் என்ன செய்ய வேண்டும்?
உணவுப் பழக்கத்தை சரி செய்யவும் – உடலுக்கு சத்தும் சக்தியும் வழங்கக் கூடிய உணவுத் திட்டமொன்றை உங்களது உணவு
ஆலோசகரிடம் பெற்றுக் கொண்டு உங்களது உணவுப் பழக்கத்தை சரி செய்து கொள்வது சிறந்ததாகும். இதுரூபவ்
நீரிழிவுள்ள போது தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளையும் கவனத்திற் கொண்டு வழங்கப்படுகிறது.
கருத்தரிப்பதற்கு முன் சரியான உடற் பருமனை அடைந்து கொள்ளவும் அல்லது அளவான உடற் பருமனை
பராமரித்துக் கொள்ளவும் உங்களது உணவு ஆலோசகர்ரூபவ் எவற்றைரூபவ் எவ்வளவு மற்றும் எந் நேரங்களில்
உள்ளெடுக்க வேண்டும் என்பதைப் பற்றிய அறிவை வழங்குவார். இந்த உணவுத் திட்டமானதுரூபவ் உணவுத் தெரிவுகளையும்ரூபவ்
மருத்துவ நிலைமைகளையும்ரூபவ் மருந்துகளையும் மற்றும் உடற் செயன்முறை வழக்கங்களையும் சீரமைத்துக் கொள்;ள உதவும்.
உடற் செயன்முறை – இது உங்களது குருதிச் சக்கரையின் அளவு இலக்கை அடைந்துகொள்ள உதவுகிறது. உடல் ரீதியாக
செயலில் இருப்பது இரத்த அழுத்தத்தையும் உடற் கொழுப்பையும் சுகாதாரமான அளவுகளில் வைத்திருக்க உதவுவதோடுரூபவ்
மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் வழங்கிரூபவ் இதயத்தையும் எலும்புகளையும் பலப்படுத்திரூபவ் தசைப் பலத்தை
மேம்படுத்திரூபவ் மூட்டுகளை நெகிழ்வான நிலையில் வைத்திருக்கவும் உதவும். உங்களது உடலிற்கும் சுகாதாரத்திற்கும்
ஏற்றவாறு உடற் செயன்முறைத் திட்டமொன்றை உங்களது வைத்தியரிடம் பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.
உங்களது மருந்துகளைப் பரிசீலித்துக் கொள்ளவும் – சில வகையான மருந்துகளைக் கர்ப்ப காலத்தில் பாவிப்பது
உங்களுக்கும் உங்களது குழந்தைக்கும் பாதுகாப்பானதல்ல. நீங்கள் அதிக கொழுப்பிற்காகவும்ரூபவ் அதிக இரத்த
அழுத்தத்திற்காகவும் உள்ளெடுக்கும் அனைத்து மருந்துகளைப் பற்றியும் உங்களது வைத்தியரிடம் அறிவிப்பது
அவசியமாகும். எந்த வகையான மருந்துகளை உட்கொள்வதுரூபவ் எவற்றைத் தவிர்த்துக் கொள்வது என்பது பற்றியும்ரூபவ்
மேலும் மாற்று மருந்துகளுக்கான பரிந்துரைகளைப் பற்றியும் உங்களது வைத்தியர் உங்களுக்கு ஆலோசனை
வழங்குவார். அநேக சந்தர்ப்பங்களில் வைத்தியர் நீரிழிவு 1 மற்றும் 2 இற்குமான இன்சுலின்களைப்
பரிந்துரை செய்வார். நீங்கள் ஏற்கனவே இன்சுலின் எடுதத்துக் கொள்பவராக இருந்தால் இன்சுலினின்
வகையையும்ரூபவ் அளவையும்ரூபவ் எடுத்துக் கொள்ளும் கால இடைவெளிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நீரிழிவுடையவராக நோயறியப்பட்டிருந்தாலும்ரூபவ் ஒரு குழந்தையைப் பிரசவித்துக் கொள்ளும் அந்த அழகிய
எதிர்பார்ப்பிற்கு அது தடையாக இருக்கக் கூடாது. உங்களது சுகாதாரத்தையும்ரூபவ் உடலையும்ரூபவ் உணவுப் பழக்கத்தையும்
சிறப்பாக கவனித்துக் கொண்டு மற்றும் உங்களது உடல் சுகாதார நிலைமைகள் பற்றி அடிக்கடி நீங்கள்
வைத்தியரிடம் அறிவித்துக் கொண்டிருக்கும் வரையிலும்; உங்கள் குடும்பத்தில் இணையப் போகும் புதிய வரவை
எண்ணி நீங்கள் குதூகலித்துக் கொள்ளலாம்.
மறுமொழி இடவும்