Current Date:மார்ச் 29, 2024

நீரிழிவு நோயறிகுறியைக் கண்டுபிடித்தல்

சரும நமைச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது திடீரென எதிர்பாரா எடை குறைவு என, ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு உள்ளதா? இவை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

இருப்பினும், திட்டவட்டமாக இதனைக் கண்டறிய சில கட்டாய குருதிப் பரிசோதனைகள் உள்ளன.

நீரிழிவு மற்றும் குருதியில் சர்க்கரையின் அளவு

சாதாரண நிலைமைகளின் கீழ்,
கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்ற ஹார்மோன் குருதியின் சர்க்கரையை சீராக்கும் காரணியாகும். குருதிச் சர்க்கரையினை செல்கள் சக்தியாகப் பயன்படுத்தப்படுவதுடன், மேலதிக சக்தியானது ரூடவ்ரல் மற்றும் தசைகளில் கிளைகோஜன் வடிவத்தில் சேமிக்கப்படுகின்றது.

இன்சுலினின் உற்பத்திக்கும் செயல்பாட்டிற்கும் தடை ஏற்படும் போது, உடலின் செல்களால் சர்க்கரையினைப் பயன்படுத்த முடியாது போகிறது. இதனால் ஏற்படும் குருதிச் சர்க்கரை திரட்சியே – நீரிழிவிற்கு வழிவகுக்கிறது.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளைக் காரணியாக முன்வைத்து நோயாளிகள் முன்வருகின்ற போது நோய் கண்டறியப்படுகிறது. மன அழுத்தம் மற்றும் மூப்படைதல் போன்ற காரணங்களினால் ஏற்படும் தடுமாற்றத்தினால் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளை பலரும் பொருட்படுத்தாது விட்டுவிடுகின்றனர். ஆரம்பத்திலேயே நீரிழிவு நோயினைக் கண்டறிந்து முறையான சிகிச்சையினை மேற்கொள்கின்ற பட்சத்தில் பார்வைக் குறைபாடு, சிறுநீரக பாதிப்பு ஆகிய உடல்நல சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

குருதிப் பரிசோதனையின் அடிப்படையில் நீரிழிவு நோயினை கண்டறிதல் வேண்டும்.

குருதிச் சர்க்கரை அளவினை ஆய்வு செய்தல்

நீரிழிவு நோயினை கண்டறிவதற்கு ஆய்வகத்தில் குருதிச் சர்க்கரையின் அளவினை பரிசோதனை செய்வது உகந்தது.

சில வகையான பரிசோதனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அவையாவன:

HbA1c பரிசோதனை

குருதி மூலமாகக் கடத்தப்படும் சர்க்கரையானது, இரத்த சிவப்பணுக்களான ஹீமோகுளோபின் (ர்டி) எனப்படும் ஒரு குறிப்பிட்ட புரதக் கூறுகளுடன் இணைக்கிறது. இந்த ர்டியு1ஊ பரிசோதனை வாயிலாக இறுதி 3 மாதங்களாக Hb உடன் இணைக்கப்பட்ட சர்க்கரையின் சராசரி அளவினை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் இப் பரிசோதனைக்கு உணவுவிடுப்பு அவசியமற்றது.

HbA1c பரிசோதனை முடிவுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்

  • நோயற்ற நிலை : 5.7% கீழ்
  • நீரிழிவிற்கு முன்னைய நிலை : 5.7% – 6.4% இடைப்பட்ட அளவு
  • நீரிழிவு : 6.5% அல்லது அதற்கு மேல் மற்றும் இரண்டு மேலதிக பரிசோதனைகள்

சீரற்ற முடிவுகள், கர்ப்பம் அல்லது Hb குறைபாடுகள் போன்ற காரணங்களால் மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அவை குருதிச் சர்க்கரையின் அளவு, உணவுவிடுப்பு குருதிச் சர்க்கரை அல்லது வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மை போன்ற பரிசோதனைகள் ஆகும்.

குருதியில் குளுக்கோஸ் பரிசோதனை

இந்தப் பரிசோதனையினை எந்த நேரத்திலும் செய்யலாம், இதற்கென விசேடமாகத் தயாராக வேண்டியதில்லை. இதன் விளைவாக ஒரு டெசிலீட்டருக்கு 200 மில்லிகிராம் (mg/dL) இருந்தால் லிட்டருக்கு 11.1 மில்லிமோல்களுக்கு (mmol/L) அல்லது அதிகமாக பரிசோதனை முடிவுகள் இருந்தால் நீரிழிவு நோயினைக் கண்டறியலாம்.

உணவுவிடுப்பு குருதிச் சர்க்கரை பரிசோதனை

இந்தப் பரிசோதனைக்கு, நீங்கள் சுமார் 8 மணித்தியாலத்திற்கு உணவுவிடுப்பில் ரூடவ்டுபட்டிருக்க வேண்டும். இப் பரிசோதனை முடிவானது பின்வருமாறு வகைப்படுத்தப்படும் :

  • நோயற்ற நிலை : 100 mg /dL (5.6 mmol/L) கீழ்
  • நீரிழிவின் ஆரம்ப நிலை : 100-125 mg /dL (5.6 to 6.9 mmol/L) இடைப்பட்ட நிலை
  • நீரிழிவு : 126 mg /dL (7 mmol/L) மேல் மற்றும் இரண்டு மேலதிக

பரிசோதனைகள்

வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மை பரிசோதனை (OGTT) உணவுவிடுப்பு சர்க்கரை அளவுப் பரிசோதனையுடன், OGTT பரிசோதனையினையும் செய்திடலாம்.

சுமார் 8 மணி நேர ஒர் இரவு உணவுவிடுப்பின் பின், காலையில் முதல் முதலாக உங்கள் உணவுவிடுப்பு குருதிச் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படும். அதன்பின்னர், குடிப்பதற்கு உங்களுக்கு சர்க்கரை கரைசல் ஒன்று வழங்கப்படும். அதனை குடித்து முடித்த இரண்டு மணி நேரத்தின் பின், உங்களின் குருதிச் சர்க்கரை மீண்டும் பரிசோதிக்கப்படும். OGTT முடிவானது பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.

  • நோயற்ற நிலை : 140 mg/dL (7.8 mmol/L) கீழ்
  • நீரிழிவின் ஆரம்ப நிலை : 140-199 mg/dL (7.8-11.0 mmol/L) இடைப்பட்ட நிலை
  • நீரிழிவு : 200 mg/dL (11.1 mmol/L) மேல் மற்றும் இரண்டு மேலதிக

பரிசோதனைகள்

முழுமையான பரிசோதனைகளின் பின்னரான சிறந்த மேற்பார்வை மற்றும் சிகிச்சைகளுக்கு வைத்தியரின் உதவியினை நாடவும்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன