Current Date:ஜனவரி 28, 2025

மேலதிகக் குருதிச் சக்கரை

சாதாரணமான அளவுகளை விடவும் குருதிச் சக்கரையின் அளவு மேலதிகமாகக் கூடிச் செல்லும் நிலைமை
ஹைப்பர்கிளைசீமியா என அழைக்கப்படுகிறது. உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படிரூபவ் உண்ணாவிரத
நிலைமைகளில் குருதிச் சக்கரையின் அளவு 7.0 அஅழடஃடு (126 அபஃனட) ஐ விட மேலதிகமாகக் காணப்படின் இந்
நிலைமை உண்ணாவிரத ஹைப்பர்கிளைசீமியா என அழைக்கப்படுகிறது. உணவு உட்கொண்ட 2 மணித்தியாலங்களின்
பின் குருதிச் சக்கரையின் அளவு 11.0 அஅழடஃடு (200 அபஃனட) ஐ விட மேலதிகமாகக் காணப்படின் இந் நிலைமை
போஸ்ட்ராண்டியல் ஹைப்பர்கிளைசீமியா என அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயறிதலின் பிரதானமான
சுட்டிக்காட்டி இதுவேயாகும். நீரிழிவற்;றவர்களில்ரூபவ் அளவுக்கதிகமான உணவு உட்கொண்ட பின்னும் மிகவும்
அரிதாகவே குருதிச் சக்கரையின் அளவு 140அபஃனடு ஐ விட அதிகமாகக் காணக்கூடும்.
ஹைப்பர்கிளைசீமியா உருவாவதற்கான காரணங்கள்
பொதுவாகப் பலருக்குரூபவ் குளுக்கோஸ் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படும் உணவுகளை உட்கொண்ட பின்னரே
குருதிச் சக்கரையின் அளவு மேலதிகமாகக் காணப்படும். நிரந்தரமான ஹைப்பர்கிளைசீமியா கொண்ட நபர்களில்
பொதுவாக இன்சுலின் அளவு குறைந்த நிலைமை அல்லது உடலினால் சுரக்கப்படும் இன்சுலினின் செயலற்ற தன்மை
காணப்படும். இன்சுலின் ஹார்மோன்கள் மட்டுமல்லாது ஹைப்பர்கிளைசீமியாவை உருவாக்கும் பிற காரணிகளாவன:
 மேலதிகச் சக்கரை கொண்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்ளுதல்
 வழக்கமாக உடற் பயிற்சி செய்யாதிருப்பதும் செயலற்றிருப்பதுவும்
 மன அழுத்தம்
 நீரிழிவிற்காகப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சீரற்ற முறையில் உட்கொள்ளுதல்
 தொற்றுக்குள்ளாகியிருத்தல் அல்லது நோய்வாய்ப்பட்டிருத்தல்
ஹைப்பர்கிளைசீமியாவின் அறிகுறிகள்
 உணவிற்கு முன்பாக (உண்ணாவிரத நிலைமைகளில்) குருதிச் சக்கரையின் அளவு 126 அபஃனட ஐ விட
மேலதிகமாக இருத்தல் அல்லது உணவு உட்கொண்ட 2 மணித்தியாலங்களின் பின் குருதிச் சக்கரையின் அளவு
200 அபஃனட ஐ விட மேலதிகமாக இருத்தல்
 அடிக்கடி சிறுநீர் கழித்தல்

 அதிகரித்த தாகம்
 தலைவலி
 கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுதல்
 மங்கலான பார்வை
 பலவீனம்
 விவரிக்க முடியாதளவிற்கு உடற் பருமனில் குறைவு
இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்.

ஹைப்பர்கிளைசீமியாவிற்கு சிகிச்சை பெறாவிட்டால் பின்வரும் சிக்கற்தன்மைகள் ஏற்படலாம்:
 தோலிலும் யோனியிலும் தொற்று ஏற்படுவதற்கான அபாயம்
 மெதுவாக ஆறக் கூடிய காயங்கள்
 பார்வை மோசமடைதல்
 நரம்புகள் சேதமடைதல்ரூபவ் உணர்ச்சியற்ற தன்மை மற்றும் விறைப்புத் தன்மை
 சமிபாட்டுத் தொகுதியில் கோளாறு ஏற்படுதல்
 நாளம் மற்றும் சிறுநீரகக் கோளாறு ஏற்படுதல்

சிகிச்சை முறைகள்
நீரிழிவுடையவர்களுக்கு ஏற்படும் ஹைப்பர்கிளைசீமியாவிற்கு சிகிச்சை பெறுவது நீண்ட கால மற்றும்
தொடர்ச்சியானதொரு செயற்பாடாகும். இதற்காகப் பினவரும் செயன்முறைகளைப் பின்பற்ற வேண்டும்:
 அதிகமாக நீரருந்துவதன் மூலம் மேலதிகமாகவுள்ள சக்கரை சிறுநீர் மூலம் வெளிச் செல்ல உதவும்
(சிறுநீரகங்கள் முறையாகச் செயற்படும் நிலையில்)
 வைத்தியரிடம் ஆலாசனை பெற்றுக் கொண்டு நாளாந்தம் உடற் பயிற்சி மேற்கொள்ளுதல்
 நீரிழிவிற்கான சிறந்ததொரு உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும்
 வழக்கமான நீரிழிவு மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளவும்
தடுப்பு முறைகள்

 ஹைப்பர்கிளைசீமியா கொண்டவர்களின் சுகாதாரமான உணவுப் பழக்கமானது உணவு வகைகளில் மட்டுமல்லாது
உணவுச் சேர்க்கை மற்றும் அளவுகளிலும் கவனம் செலுத்துகின்றது. அதிகளவு சக்கரை கொண்ட உணவுகளைத்
தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பானதாகும். குறைவான
கிளைசெமிக் அளவு கொண்ட மாப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும்.
 நாளாந்தம் குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.
உடலின் தொடர்ச்சியான செயற்பாட்டினாலும் இன்சுலினின் செயற்திறனை அதிகரிக்க முடியும்.
 குருதிச் சக்கரையின் அளவை முறையாகக் கண்காணித்து வரவேண்டும். வாரத்திற்கு அல்லது நாளாந்தம் பல
தடவைகள் குருதிச் சக்கரையின் அளவைப் பரிசீலித்துப் பதிவு செய்து கொள்ளவும்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன