Current Date:ஜனவரி 21, 2025

வெளியிடங்களிள் சாப்பிடச் செல்லல்

நீரிழிவு உள்ளவர்கள் தாம் உண்ணும் உணவு குறித்து அக்கறை கொள்வது மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறே, நீரிழிவுடையவர்களின் உணவுப் பழக்கங்களும் நீரிழிவை மிகவும் சிறப்பாகக் கையாள்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன. நமது உணவை நாமே தயாரித்துக் கொள்வதன் மூலம் உணவிற்கான மூலப்பொருட்களையும் தயாரிப்பு முறையினையும் கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் வெளியிடங்களில் சாப்பிட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது ஆரோக்கியமான தெரிவுகளை மேற்கொள்வது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

1. காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
காய்கறிகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான விட்டமின்களும் கனியுப்புகளும் நிறைந்திருக்கின்றன. மேலும் காய்கறிகளில் மிகவும் குறைந்த அளவிலேயே கலோரிகளும்; சக்கரையும் உள்ளதால் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு இவை உதவுகின்றன. காய்கறிகளில் அதிகளவு அன்டிஆக்ஸிடன்ட்களும் காணப்படுகின்றன. இவை, நீரிழிவுடையவர்களிடையே பரவலாகக் காணப்படும் ‘மெகுலர்’ அழிவு மற்றும் கண்புரை பாதிப்பிலிருந்தும் கண்களைக் காக்க உதவுகின்றன.
2. மேலதிக உப்பு மற்றும் ‘ட்ரான்ஸ்’ கொழுப்புகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
உப்பானது, நீரிழிவுடையவர்களிடையே இதய நோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்யக் கூடியது. எனவே, சோடியம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. மேலும், ‘ட்ரான்ஸ்’ கொழுப்புகள் உடலிலுள்ள பயனுள்ள கொழுப்பின் அளவைக் குறையச் செய்து பாதகமான கொழுப்பின் அளவைக் கூட்டுகின்றன. மிக முக்கியமாக, இன்சுலின் எதிர்ப்பை இவை அதிகரிக்கச் செய்வதால் நீரிழிவுடையவர்களுக்கு அறவே உகந்ததல்ல. எனவே வெளியிடங்களில் சாப்பிடும் போது துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பேணியில் அடைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
3. தேவையான அளவை மட்டும் உட்கொள்ளவும்
உணவின் கலோரி அளவை அறிந்து உண்ணுவது முக்கியமென்பதால், உட்கொள்ள விரும்பும் உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, உணவு தயாரிக்கப்படும் முறையிலும்; கவனம் செலுத்த வேண்டும். அவிக்கப்பட்ட, வேக வைக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட உணவுகளை விட பொரிக்கப்பட்ட உணவு வகைகளில் கலோரியும் ‘ட்ரான்ஸ்’ கொழுப்புகளும் அதிகமான அளவில் காணப்படுகின்றன. பரிமாறப்பட்ட உணவிலுள்ள மொத்தக் கலோரி அளவை, இணையத்தளத்தினூடாக அல்லது உணவகங்களில் கேட்டு அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எப்போதும் வைத்தியரினால் அறிவுறுத்தப்பட்ட அளவு உணவையே உண்பது மிக அவசியமானதாகும்.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன