பொதுவாகப் பாவனையிலிருக்கும் சக்கரையின், அதாவது நாம் அனைவரும் விரும்பி உண்ணும் அடிப்படை மாப்பொருளின், இரசாயனப் பெயர் சுக்ரோஸ் ஆகும். இது இயற்கையாகத் தாவரங்களிலும், குறிப்பாகப் பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படுகிறது. ஈரலகுச் சக்கரையான சுக்ரோஸ் (னi ஸ்ரீ 2), ஓரலகுச் சக்கரையான குளுக்கோஸ் (அழழெ ஸ்ரீ 1) மற்றும் பிரக்டோஸில் இருந்து உருவாக்கப்படுகிறது. இவை இரண்டுமே சுக்ரோஸை உருவாக்குகின்றன. எல்லா வகையான ஓரலகுச் சக்கரைகளும் ஈரலகுச் சக்கரைகளும் சக்கரை என்றே கருதப்படுகின்றன.
அதிகளவிலான சக்கரைப் பாவனை நீரிழிவிற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என்பதை நாம் அறிவோம். மிதமான பாவனை மிகவும் அவசியமானதாகும். பலரும்; இதை பல விதமாக எடுத்துக் கொண்டாலும், அடிப்படையில், சுகாதாரமான தெரிவுகளை மேற்கொள்வதன் மூலம் உணவுகளை சமநிலையாகவும் சுவாரஸ்யமாகும் பேணலாம்.
படம்
நாளாந்தம் நீங்கள் உட்கொள்ளும் சக்கரையின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவை விடவும் 700மூ அதிகமானது என்பதை நீங்கள் அறிவீர்களா?
ஐஸ் கோப்பி 58 கிராம்கள் மஃபின் 50 கிராம்கள்
கேக் 40 கிராம்கள்
குளிர் பானம் 35 கிராம்கள் மென்மையான கேக் 33 கிராம்கள்
மெக்கரூன் 16 கிராம்கள் டோனட் 12 கிராம்கள்
நீரிழிவற்ற ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் ஒரு நாளைக்குப் பரிந்துரைக்கப்பட்ட சக்கரையின் அளவானது 25 கிராம்கள்; அல்லது 6 தேநீர்க் கரண்டிகள் ஆகும். ஆயினும், மேற்காட்டப்பட்ட படம் குறிப்பிடுவதைப் போல, பொதுவாக ஒவ்வொரு இலங்கையர்களும் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் சக்கரையின் அளவானது 36 கிராம்கள் இனிப்பூட்டிய உணவுகளையும் பானங்களையும் உட்கொள்வதன் மூலம் இரட்டிப்படைகின்றது.
மறுமொழி இடவும்