நீரிழிவ மேலாண்மையின் முக்கியமான இரு சிகிச்சை முறைகளாவன: மருந்துகள் மூலமான சிகிச்சை முறை மற்றும்
மருந்துகளற்ற சிகிச்சை முறையாகும். குருதிச் சக்கரையின் குறித்த இலக்கை அடைந்துகொள்ள முதலாவதாகத் தெரிவு
செய்யப்படும் முறையானதுரூபவ் மருந்துகளற்ற சிகிச்சை முறையாகும். இது சுகாதாரமான உணவுப் பழக்கங்கள் மற்றும்
முறையான உடற்பயிற்சி மூலம் மேற்கொள்ளப்படும். இம் முறை பயனற்றதாக இருப்பின் மருந்துகள் மூலமான
சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும்.
இம் மருந்துகள் வழங்கப்படுவதன் நோக்கங்களானதுரூபவ் குருதிச் சக்கரையின் அளவைச் சாதாரண அளவுகளில்
பராமரிப்பதுரூபவ் அறிகுறிகளைச் சீராக்குவது மற்றும் நீண்டகால சிக்கற்தன்மைகளைக் குறைத்துக் கொள்வதுமாகும்.
பொதுவாகப் பாவனையிலுள்ள நீரிழிவு மருந்துகளாவன: வாய் மூலம் உட்கொள்ளும் ஹைப்போகிளைசீமியா
மருந்துகள் (ழுர்ழு) அல்லது இன்சுலின் அல்லது இரண்டுமாகும். கீழ் காணப்படும் விவரங்கள் இம் மருந்துகள்
எவ்வாறு செயற்படுகின்றது என்பது பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட
மருந்துகளை மட்டும் உட்கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
வாய் மூலம் உட்கொள்ளும் ஹைப்போகிளைசீமியா மருந்துகள் (ழுர்ழு)
இவைரூபவ் வகை 2 நீரிழிவிற்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளாகும். இதன் செயற்திறனின் அடிப்படையில் இம்
மருந்து 3 வகைப்படும். அவையாவன:
பிகுவனைட்ஸ்
மெட்ஃபோர்மின் இவ் வகையைச் சேர்ந்ததொரு மருந்தாகும். இதுரூபவ் கல்லீரலினால் சுரக்கப்படும்
குளுக்கோஸின் அளவைக் குறைத்து குருதிச் சக்கரையின் அளவைக் குறைக்க உதவும். மேலும் இதுரூபவ் தசைகளிலுள்ள
திசுக்களை இன்சுலின் உணர்திறன் மிக்கதாக மாற்றுவதன் மூலம் குளுக்கோஸ் கலங்களுக்குள்
உறிஞ்சப்படுவதை அதிகரித்து குருதிச் சக்கரையின் அளவைக் குறைக்க உதவும்.
சல்போனைல்யூரியாஸ்
இது கணையத்தைத் தூண்டி இன்சுலினை அதிமாகச் சுரக்கச் செய்கிறது. இரண்டாவது தலைமுறை மருந்துகள் மூன்று இவ்
வகையைச் சேர்ந்ததாகும். அவையாவன: கிளைமபைரைடுரூபவ் கிளிபிசைடு மற்றும் கிளைபுரைடு என்பனவாகும். இந்த
மூன்று மருந்துகளின் மூலம் உங்களுக்கு குறைவான குருதிச் சக்கரை அளவு (ஹைப்போகிளைசீமியா)
உருவாகக் கூடும். இதே நிலைமையைச் சல்போலியூரியாஸ் மருந்துகளும் விளைவிக்குமாயினும்ரூபவ் எவ்வளவு
தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதின் மூலமும் ஏனைய மருந்துகளுடன்
தொடர்புறுவதாலும் இதன் பக்கவிளைவுகள் மாறுபட்டதாக இருக்கும்.
னுPP-4 தடுப்பான்கள்
புடுP-1 சேர்க்கையின் சிதைவைத் தடுப்பதின் மூலம் செயற்படுகிறது. இதுரூபவ் உடலில் இயற்கையாகத்
தோற்றுவிக்கப்படும் குருதிச் சக்கரையின் அளவைக் குறைக்கும் ஒரு கலவையாகும். ஆயினும்ரூபவ் இது மிகவும்
விரைவாகச் சிதைவடையக் கூடியதாகும். னுPP-4 தடுப்பான்கள் புடுP-1 சேர்க்கையின் சிதைவைத் தடுப்பதின்
மூலம் அவற்றை உடலில் மிக நீண்ட நேரம் செயற்பாட்டிலிருக்கச் செய்து குருதிச் சக்கரையின்
அளவுகள் கூட எத்தனிக்கும் போது அதனைக் குறைக்க உதவுகின்றது. பொதுவாகக் கிடைக்கக் கூடிய னுPP-4
தடுப்பான்களாவன: சிட்டாகிளிப்டின்ரூபவ் லினாகிளிப்டின்ரூபவ் சாக்ஸகிளிப்டின் மற்றும்
வில்டாகிளிப்டின் என்பனவாகும்.
அல்ஃபா குளுக்கோஸிடேஸ் தடுப்பான்கள்
அகார்போஸ் மற்றும் மிக்லிட்டால் என்பன இவ் வகையைச் சேர்ந்தவையாகும். இவைரூபவ் குடலிலுள்ள
மாச்சத்துகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம் குருதிச் சக்கரையின் அளவைக் குறைக்க உதவும். மேலும்ரூபவ் இவை சில
வகையான சக்கரைகளின் சிதைவையும் தாமதமாக்;க உதவும். ஆதன் விளைவாகரூபவ் உணவு உட்கொண்ட பின் குருதிச்
சக்கரையின் அளவு கூடுவதைத் தாமதப்படுத்துகின்றது.
வாய் மூலமாக உட்கொள்ளப்படும் மருந்துகளின் சேர்க்கைகள்
மேற்கூறப்பட்ட மருந்துகள் வெவ்வேறு வகையில் குருதிச் சக்கரையின் அளவைக் குறைக்க உதவுவதால் அவற்றை
ஒன்றாகச் சேர்த்து உள்ளெடுப்பதால் அதிகூடிய பலனைப் பெற முடியும்.
இன்சுலின்
வகை 1 நீரிழிவடையவர்களுக்கு இன்சுலின் மிகவும் முக்கியமானதாகும். இந் நிலைமை கணையத்தினால் இன்சுலின்
சுரக்க முடியாத போது ஏற்படுவதால் வெளி மூலங்களிலிருந்து இன்சுலினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய
தேவையேற்படுகிறது. இன்சுலின்ரூபவ் இரத்தக் குழாய்களிலிருந்து கலங்களுக்கு குளுக்கோஸினைக் கொண்டு செல்வதால்
அதனைக் கலங்கள் சக்தியாக மாற்றக் கூடியதாகவுள்ளது.
வெளி மூலங்களால் இன்சுலினைத் தயாரிப்பதுரூபவ் எவ்வளவு வேகமாக அவை செயற்படத் தொடங்குகிறது என்பதனையும்
எவ்வளவு நேரம் அவற்றின் தாக்குதிறன் நீடிக்கிறது என்பதனையும் கருத்திற் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.
இன்சுலினானதுரூபவ் அடிவயிறுரூபவ் மேல் கைரூபவ் தொடையின் மேற்பகுதி மற்றும் பிட்டப் பகுதியில் (விரைவாக
உறிஞ்சப்படக் கூடிய தன்மை உள்ள பகுதிகளில்) தோலுக்குக் கீழாக உட்செலுத்தப்படுகிறது. உங்களது நிலைமைக்கு
மிகவும் உகந்த இன்சுலினை உங்களது வைத்தியர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார்.
பக்க விளைவுகள்
எந்த வகையான மருந்துகளுடனும் குருதிச் சக்கரை அளவைக் குறைக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்ளப்படும் போது அவை
பக்க விளைவுகள் கொண்டதாகவே இருக்கும். மருந்துகளுடன் வழங்கப்படும் தகவல் துண்டுகளில் சாத்தியமான மற்றும்
அபாயகரமான பக்க விளைவுகள் பற்றிய குறிப்புக் காணப்படும். உங்களது சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்
அவற்றை வாசித்து விளங்கிக் கொள்வது அவசியமாகும். அதில் குறிப்பிடப்பட்ட பக்க விளைவுகளை நீங்கள்
அனுபவிக்க நேர்ந்தால் உங்களது வைத்தியரை நாடவும். உங்களது மருந்துகள் சம்பந்தமான முழுமையான விளக்கங்களை
உங்களது வைத்தியர் உங்களுக்கு விளக்குவார்.
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்
வேறு பிரச்சினைகளுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை மற்றும் நீரிழிவிற்காக எடுத்துக்
கொள்ளும் மருந்துகளையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதா என்பதனை உங்களது
வைத்தியரிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.
மருந்துகளுடன் வழங்கப்படும் தகவல் துண்டுகளைக் கவனமாக வாசித்து நீங்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய
விடயங்களைப் பற்றி அவதானமாக இருங்கள்.
வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை மட்டும் உள்ளெடுக்கவும். மேலதிகமான அளவுகளில்
உள்ளெடுக்கப்பட்டால் விரைவாக வைத்தியரை நாடவும்.
உங்களைப் போன்ற நிலைமைகளில் இருக்கும் ஏனையவர்களுடன் உங்களது மருந்துத் தாள்களைப் பகிர்ந்து
கொள்ள வேண்டாம்.
நீரிழிவைக் குணப்படுத்த முடியாமல் இருப்பினும்ரூபவ் சாதாரண அளவுகளில் குருதிச் சக்கரையின் அளவைப் பேணுவதன்
மூலம் நிலைமைகளை நன்றாகப் பராமரித்துக் கொண்டு சிக்கல்களற்ற வாழ்க்கையை வாழக் கூடியதாக இருக்கும்.
தகவல் மூலம்: hவவிள:ஃஃறறற.னயைடிநவநள.ழசபஃனயைடிநவநளஃஅநனiஉயவழைn-அயயெபநஅநவெஃழசயட-அநனiஉயவழைnஃறாயவ-
யசந-அல-ழிவழைளெ
மறுமொழி இடவும்