நீங்கள் நீரிழிவுடையவரென வைத்தியரினால் நோயறியப்படுவது மிகவும் விரும்பத்தகாத ஒரு நிகழ்வாகும். இது
சாதாரணத் தடிமனைப் போன்றல்லாது அதிகளவு மருந்துகளையும்ரூபவ் வாழ்க்கை முறையிலும் உணவுப் பழக்கத்திலும்
மாற்றங்களையும் கொண்டிருப்பதால் நோயறியப்படும்போது மிகவும் அதிர்ச்சியையும் திகைப்பையும்
கவலையையும் தருவிக்கும். ஆனால்ரூபவ் இது உலகத்தின் முடிவோ அல்லது உங்களின் வாழ்க்கையின் முடிவோ அல்ல.
ஏனெனில்ரூபவ் நீரிழிவுடன் வாழ்வது மிகவும் அவமானமானதொரு வாழ்க்கையும் அல்லதாகும். உலகமட்டத்தில் பல
இலட்சம் மக்கள் நீரிழிவுடன் வாழ்ந்து வருகின்றனர்.
3 வகையான நீரிழிவு காணப்படுகிறது. அவையாவன: வகை 1 நீரிழிவுரூபவ் வகை 2 நீரிழிவு மற்றும் கர்ப்பகால
நீரிழிவும் ஆகும். உடலுக்குத் தேவையான குளுக்கோஸினை உட்கொள்ளும் உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும்
இன்சுலினை தயாரிப்பதைத் தடுப்பதால் வகை 1 நீரிழிவு மிகவும் ஆபத்தானது. இதன் காரணமாக நீரிழிவுடையவர்கள்
நாளாந்தம் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். வகை 2 நீரிழிவு மிகவும் பொதுவானதாகவும்
கரப்பகால நீரிழிவு கர்ப்பிணிகளில் மட்டும் காணப்படும். எவ்வகையான நீரிழிவினால்
பாதிக்கப்பட்டிருப்பினும் அதனைக் கவனத்திற் கொண்டு முறையாக சிகிச்சையளிப்பது அவசியமாகும். முறையாக
சிகிச்சையளிக்கப்படாத போது மாரடைப்புரூபவ் பக்கவாதம்ரூபவ் கண்களில் பிரச்சினைரூபவ் நரம்புகளில் சேதம்ரூபவ்
சிறுநீரக செயலிழப்பு மற்றும் பல வகையான பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
நீரிழிவுடன் வாழ்வது எப்படி?
நீரிழிவுடன் வாழும் போது அதிகமான கவலை மற்றும் கோபம் ஏற்படுவது பொதுவானதாகும். உங்களது உணவுப்
பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் முழுமையாக மாற்றியமைப்பது சிரமமாக இருக்கும் போது அவற்றைச்
செய்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். உங்களது வழக்கமான உணவுப் பழக்கத்தைத் தொடர்ச்சியாகப்
பின்பற்றுவது மிகவும் சிரமமானதாக இருக்கும். ஆயினும்ரூபவ் முறையானதொரு உணவு விதிமுறையைப்
பின்பற்றுவது பின்வரும் படிகளின் மூலம் சாத்தியமானதாகும்.
நன்றாகச் சிந்தியுங்கள் – மன அழுத்தம் உங்களது குருதிச் சக்கரை அளவைத் தூண்டிவிடக் கூடும்.
வேலைகளில் இருந்து சிறிது ஓய்வுரூபவ் ஆழ்ந்த மூச்சுரூபவ் நடைப் பயிற்சிரூபவ் பொழுது போக்கு விடயங்களை
மேற்கொள்ளுதல் மற்றும் இசையுடன் நேரத்தைக் கழித்தல் போன்ற செயன்முறைகளினால் மன அழுத்தத்தை
குறைத்துக் கொள்ளவும். நீங்கள் சோர்வாக உணர்ந்தால் நண்பர்களிடமோ அல்லது குடும்ப
அங்கத்தவர்களிடமோ உரையாடுவது மாற்றத்தைத் தரும். நோயறிதலின் பின் ஏற்படும் தீவிரமான மன
அழுத்தங்களைத் தொழில்முறை ஆலோசகரிடம் உரையாடுவதன் மூலமும் சரி செய்துகொள்ள முடியும்.
நன்றாக உண்ணுங்கள் – நீரிழிவு நிலைமைகள் உங்களது உடலை எவ்வாறு பாதிக்கும் என்பதனைத்
தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணி இதுவாகும். வைத்தியருடன் கலந்தாலோசித்து நீரிழிவிற்கான
உணவுத் திட்டமொன்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். கலோரி அளவு குறைந்த உணவுகளான நிறைவுற்ற
கொழுப்புரூபவ் சீனி மற்றும் உப்பு போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். முழுத் தானிய
உணவுகள்ரூபவ் பாண்ரூபவ் கிரெக்கர்ஸ்ரூபவ் அரிசி அல்லது பாஸ்தாவுடன் பழங்களும்ரூபவ் காய்கறி வகைகளும்ரூபவ்
குறைவான கொழுப்புக் கொண்ட அல்லது கொழுப்பு நீக்கிய பால் மற்றும் பாற்கட்டி போன்ற
உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களது உணவுப் பழக்கம் உங்களது உடலுக்கு ஏற்றதாக அமைவதற்கு
சுகாதாரமானதொரு உணவுத் திட்டத்தைத் தெரிவு செய்துகொள்ளுங்கள்.
நன்றாக அருந்துங்கள் – நாம் உயிர் வாழ நீர் அருந்துதல் மிகவும் அவசியமானதாகையால்ரூபவ் பழச்
சாறுகளையும் குளிர்பானங்களையும் தவிர்த்து நீர் அருந்துவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
உறுதியாக இருங்கள் – சுகாதாரமாக வாழ்வதற்கு உங்களது உடலுக்குத் தேவையான பராமரிப்பையும்
தொழிற்பாட்டையும் வழங்குங்கள். நடைப் பயிற்சி அல்லது தொங்கோட்டம் போன்ற எளிதான உடற்
பயிற்சி இலக்கைத் தயார் செய்து கொள்ளுங்கள். புஷ் அப்கள் யோகா மற்றும் கைரூபவ் கால்களை நீட்டுதல்
போன்ற உடற் பயிற்சிகளை வீட்டில் செய்வதன் மூலம் உங்களது தசைகளை உறுதியாக வைத்திருங்கள். இது
உங்களது உடற் பருமனையும் சமநிலையில் வைத்திருக்க உதவும்.
மருந்துகளை உட்கொள்ளுங்கள் – எந்த வகையான நிலைமைகளிலும் உங்களது நீரிழிவு மற்றும் ஏனைய
பிரச்சினைகளுக்கான மருந்துகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். பக்க விளைவுகள் கொண்ட மருந்துகள்
பற்றி வைத்தியரிடம் அறிவியுங்கள். உங்களது மருந்துகளைக் கொள்வனவு செய்ய வசதி இல்லாதிருப்பின்
அதனையும் வைத்தியரிடம் அறிவிப்பதன் மூலம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள மருத்துவத்
திட்டங்களின் மூலம் இலவாசமான மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும்ரூபவ் இரத்த அழுத்தத்தையும்
குருதிச் சக்கரையின் அளவையும் தொடர்ச்சியாகப் பரிசீலித்து அதனை வைத்தியரிடம் காட்டிக்
கொள்ளவும். இதன் மூலம்ரூபவ் உங்களது நிலைமைக்கு ஏற்றவாறு மருந்துகளை மாற்றிக் கொள்ள முடியும்.
சுத்தமாக இருங்கள் – எப்போதும் உடல் சுத்தத்தைப் பேணுங்கள். சுத்தமான ஆடைகளை அணிவதன் மூலம்
உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுங்கள். நிலைமைகள் மோசமடைவதற்கு முன்ரூபவ் வெட்டுகள்ரூபவ் கொப்புளங்கள்
மற்றும் புண்களுக்கு சிகிச்சையளியுங்கள். முறையாகப் பல் துலக்குவதன் மூலம் பற்களையும் முரசுகளையும்
சுகாதாரமாகவும் உறுதியாகவும் வைத்திருங்கள்.
புகைத்தலைக் கைவிடுங்கள் – நீரிழிவுடைவராக இருப்பினும் இல்லாத பட்சத்திலும் புகைத்தல் மரணத்தை
உண்டாக்கும். ஒவ்வொரு சிகரெட்டும் உங்களது வாழ்வில் ஒவ்வொரு நாளைக் குறைக்கும் என்பதால் விரைவாக
செயற்பட்டு புகைத்தலைக் கைவிடுங்கள்.
பாதுகாப்பான உணவுத் திட்டதினைப் பெற்றுக் கொள்ளவும்ரூபவ் முறையான உடற் பயிற்சிகளை அறிந்து
கொள்ளவும்ரூபவ் உடலுறுதிரூபவ் சுகாதாரம் மற்றும் மருந்துத் திட்டம் போன்றவற்றை தொடர்ச்சியாக அறிந்து
கொள்ளவும் அடிக்கடி வைத்தியரை நாடவும். உங்களது சுகாதாரத்தினைப் பாதுகாக்கும் பொறுப்பு பிரதானமாக
உங்களுக்கே உரியது. ஆகையால்ரூபவ் அறிவுடன் செயற்படுங்கள். நீரிழிவு வாழ்க்கையின் முடிவு அல்ல. மாறாகரூபவ்
சந்தோஷமானதும் சுகாதாரமானதுமான ஒரு வாழ்க்கை முறையின் ஆரம்பிப்பதற்குமான முதலாவது அடியாகும். இந்த
மாற்றத்தினை உங்களிடமிருந்தே ஆரம்பியுங்கள்.
மறுமொழி இடவும்