Current Date:ஜனவரி 22, 2025

உங்கள் பாதங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல்

மிகவும் சிக்கலான பொறிமுறைகளால் நீரிழிவுடையவர்களின் அதிக குருதிச் சக்கரை அளவானது சிறிய மற்றும் பெரிய இரத்தக் குழாய்களைச் சேதப்படுத்துகிறது. சிறிய இரத்தக் குழாய்களில் ஏற்படும் சேதமானது, உங்கள் தோலை எளிதில் சேதமடையக் கூடியதாக மாற்றுவதோடு அல்லாமல் கால்களிலும் பாதங்களிலும் உள்ள நரம்புகளையும் சேதப்படுத்திவிடுகிறது.

மாறாக, பெரிய இரத்தக் குழாய்களில் ஏற்படும் சேதமானது, குருதிச் சுழற்சியைப் பாதிப்பதன் மூலம் பாதங்களுக்குப் போதிய அளவு குருதி, ஒக்சிஜன் மற்றும் போஷாக்கு விநியோகத்தைப் பாதிக்கிறது. இந்த இரு வகையான பாதிப்புகளும் நீரிழிவுக் கால்களுக்கான அறிகுறிகளுக்கு இட்டுச் செல்லும்.

அறிகுறிகள்

கால்களின் எந்தப் பகுதி இந் நிலைமைக்கு உள்ளாகியுள்ளது என்பதனைக் கொண்டு நீரிழிவுக் கால்களுக்கான அறிகுறிகள் வேறுபடும். நரம்புகளில் சிக்கல் தன்மைகள் ஏற்படும் இடத்தில் நரம்புக் கோளாறு ஏற்பட்டு நீரிழிவு நியூரோபதியை விளைவிக்கும். இதற்கான அறிகுறிகளாக, பாதங்களின் உணர்ச்சியற்ற தன்மை, பாதங்களில் அதீத வலி அல்லது எரிச்சல் தன்மை காணப்படுகிறது. மேலும், மேம்படுத்தப்பட்ட குருதிச் சக்கரையின் அளவு காரணமாக தோல் வறட்சியும், வெடிப்புகளும் மற்றும் காயங்களும் ஏற்படக் கூடும்.

ஒடுக்கப்பட்ட இரத்தக் குழாய்களினாலும் குழப்பமடைந்த குருதிச் சுழற்சியினாலும் காயங்கள் இலகுவில் ஆறுவது மிகவும் சிரமமானதாகக் காணப்படும். மேலும், பாதங்களின் குழப்பமடைந்த குருதிச் சுழற்சியினால் புறநாடி நோய்கள் ஏற்பட்டு நடக்கும் போது பாதங்களில் நோவு போன்ற அறிகுறிகளைக் காட்டும். நீரிழிவின் வேறுபட்ட சிக்கல் தன்மைகள் பாதங்களில் புண் உண்டாவதற்கு வழிகாட்டியாக இருக்கும். இவை மிக ஆழமாகத் திறக்கப்பட்ட காயங்களாகும். மேலதிகமாக, முறையாக பராமரிக்கப்படாத காயங்கள் துர்நாற்றத்துடன் கூடிய சீழையும் உருவாக்குவதால் காலப் போக்கில் இவை குருதித் தொகுதியில் பக்டீரியாத் தொற்றை உண்டாக்கக் கூடும். இது உயிரிழப்பை உண்டாக்கக் கூடிய மிகவும் பாரதூரமான ஒரு நிலைமையாகும்.

நீரிழிவுடையவர்களின் பாதங்களில் புண் ஏற்படுவதோடு அல்லாமல் பயபெசநநெ ஐயும் அனுபவிக்க நேரிடும். இந்தத் தொற்றானது, தோலினையும், மென்மையான திசுக்களையும் மற்றும் தசைகளையும் அழுகச் செய்யும். இதனால் பாதிக்கப்பட்ட பாதத்தின் பகுதி கறுப்பாகவும், வறட்சியாகவும் மற்றும் துர்நாற்றம் உடையதாகவும் காணப்படும்.

நீரிழிவுப் பாத நிலைமைகளைப் பராமரித்தல்

நீரிழிவுப் பாத நிலைமைகளைப் பராமரிக்க வைத்தியரின் உதவி மிகவும் அவசியமானதாகும். பாதங்களில் காணப்படும் சேதங்களின் பாரதூரத்தினைப் பொறுத்து பாதங்களைப் பராமரிக்கும் முறைகளும் வேறுபடும். மிகவும் பாரதூரமற்ற நிலைமைகளில் மேலும் சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காயங்களை ஆற்றுதல் மற்றும் பாதங்களைப் பராமரிக்கும் சாதனங்களை உபயோகித்தில் போன்ற முறைகள் உபயோகிக்கப்படும். தொற்றுகளின் அறிகுறிகள் காணப்படுமிடத்தில், பொதுவாக வைத்தியரினால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படும். Gangrene நிலைமை போன்ற தீவிரம் கொண்ட நீரிழிவுப் பாதங்களுக்கு அறுவை.

சிகிச்சை செய்யப்படும். இறந்த திசுக்களை அகற்றுதல் அல்லது முழு உறுப்பினையும் துண்டித்தல் போன்ற வேறுபட்ட தேவைகளினால் இந்த அறுவை சிகிச்சை வகைகள் வேறுபடும். இலங்கையில் அதிகமானவர்கள் வெறும் பாதங்களால் நடப்பதைப் பழக்கமாக கொண்ட காரணத்தினால், பாதங்களுக்கு சேதம் விளைவிக்கும் அபாயம் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த சேதங்கள் முக்கியமாக நீரிழிவுடையவர்களில், கவனிக்கப்படாமலும் சிகிச்சை செய்யப்படாமலும் இருக்கும் பட்சத்தில் பாதங்களை துண்டிக்கும் நிலைமை ஏற்படுகிறது.

தடுப்பு முறைகள்

  • முறையான உணவுப் பழக்கங்களைப் பேணுவதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட குருதிச் சக்கரையின் அளவைப் பேணுவதுடன் வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளுதல்.
  • தொடர்ச்சியாகப் பாதங்களைக் கவனித்துக் கொள்ளுதல். புhதங்களை நாளாந்தம் பரிசீலிப்பதால் வெடிப்புகள், காயங்கள் மற்றும் ஏனைய சேதங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க முடியும்.
  • இளஞ் சூடான நீரினாலும் மென்மையான சவர்க்காரம் கொண்டும் பாதங்களை ஒவ்வொரு நாளும் கழுவி பின் துணியினால் ஒற்றித் துடைத்துக் கொள்ளவும். பாதங்களை நீரில் வெகு நேரம் ஊறவைப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
  • காலுறைகளையும், பாதங்களை முழுதாக மறைக்கக் கூடிய மிகவும் வசதியான காலணிகளையும் அணிந்து கொள்ளவும். பாதங்களில் காயம் ஏற்படுவதிலிருந்து இது பாதுகாக்கும். நீரிழிவுடைவர்களுக்கான தனித்துவமான பாதணிகள் மிகவும் பொருத்தமானது.
  • பாதங்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் ஓட்டப் பயிற்சி போன்ற உடற் பயிற்சிகளைத் தவிர்த்துக் கொள்ளவும். சைக்கிளிங் பயிற்சிக்கான சாதனங்களைப் பயன்படுத்துவதும்; வசதியான காலணிகளுடன் விறுவிறுப்பான நடைப்பயிற்சியினை மேற்கொள்வதும் மிகவும் சிறப்பானதாகும்.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன