Current Date:டிசம்பர் 3, 2024

நீரிழிவு நியூரோபதி

மோசமாகப் பராமரிக்கப்பட்ட நீரிழிவு காரணமாக உருவாகும் நரம்பியல் கோளாறு நீரிழிவு
நியூரோபதி என அழைக்கப்படும். வகை 1 மற்றும் 2 ஐச் சேர்ந்த நீரிழிவின் பொதுவான சிக்கல் தன்மையாக
இது காணப்படுகிறது. நோயறியப்படுதலின் போது வகை 2 ஐச் சேர்ந்த நீரிழிவுடையவர்களில் அண்ணளவாக 26மூ
பேருக்கு ஏற்கனவே நரம்பியல் கோளாறுகள் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
மூளைக்கும் ஏனைய உடல் உறுப்புகளுக்கும் இடையிலான சமிக்ஞைகளை நரம்புகள் கொண்டு செல்கின்றது. இந்த
சமிக்ஞைகள் மூலமே எமது உடல் பொருட்களை உணருவதற்கும் அசைப்பதற்கும்ரூபவ் உணவுச் சமிபாடுரூபவ் சிறுநீர்
மற்றும் மலம் கழித்தல் போன்ற பலவகையான உடற் தொழிற்பாடுகளின் கட்டுப்பாட்டையும் பெறுகின்றது.

நீரிழிவு நியூரோபதி உண்டாவதற்கான காரணங்கள்
காலப் போக்கில் கட்டுப்படுத்தப்படாத மற்றும் தொடர்ச்சியாக அதிகமாகக் காணப்படும் குருதிச் சக்கரையின்
அளவும் கலங்களுக்கு ஒக்சிஜனையும் போஷாக்கையும் வழங்கும் சிறிய இரத்தக் குழாய்களைச் சேதப்படுத்துகின்றது.
ஏனைய காரணிகளாவன:
 அதிக பருமன்
 உயர் இரத்த அழுத்தம்
 அதிகக் கொழுப்பு
 அதிக ட்ரைகிளிசரைடுகள்
 மேம்படுத்தப்பட்ட சிறுநீரக நோய்கள் (நீரிழிவு நெப்ரோபதி)
 இதய நோய் சார்ந்த வரலாறு
 அளவுக்கதிகமாக மதுபானம் உட்கொள்ளுதல்
 புகைத்தல்

அறிகுறிகள்

நீரிழிவு நியூரோபதியில் நான்கு வகைகள் காணப்படுகின்றன. நீரிழிவால் பாதிக்கப்பட்ட
ஒவ்வொருவரும் இவற்றில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ அனுபவிக்கக் கூடும். நியூரோபதியின்
வகையினைப் பொறுத்து அறிகுறிகளைப் படிப்படியாக உணர முடியும். பல சந்தர்ப்பங்களில் நீரிழிவு
நியூரோபதியானது கவனிக்க முடியாததாகவும் மேலும் நிலைமைகள் மிகவும் தீவிரமடைந்த பின்னரே கவனிக்கக்
கூடியதாகவும் இருக்கும்.
புற எல்லை சார்ந்த நியூரோபதி
இதுவே அதிகம் பரவலாகக் காணப்படும் வகையாகும். இதனால் பாதிக்கப்படும் பாகங்களாவனரூபவ் கீழ்க் கால்ரூபவ் பாதம்ரூபவ்
கைகள் மற்றும் சந்துகளாகும். காணக்கூடிய அறிகுறிகளாவன:
 வெப்பத்தை குறைவாக உணரக் கூடிய அளவிற்கு உணர்ச்சியற்ற தன்மை அல்லது குறைவான உணர்திறன்
 எரிச்சல் உணர்வை உண்டாக்கும் வரையிலும் கூச்சமான தன்மை
 துல்லியமான வலி அல்லது தசைப் பிடிப்பு
 தொடுகைக்கு மிகவும் அதிகமான உணர்திறன்
 தசைகளில் பலவீனம்
 எதிர் நிழல்ரூபவ் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பணை இழத்தல்
 ஆழ்ந்த வெட்டுரூபவ் தொற்றுரூபவ் மூட்டு மற்றும் எலும்புகளில் வலி போன்ற தீவிரமான பாத நோய்கள்
 புற எல்லை சார்ந்த நியூரோபதியின் அறிகுறிகளாவன பொதுவாக இரவு வேளைகளில் தோன்றக்
கூடியது
தன்னியக்க நியூரோபதி
தன்னியக்க நரம்புத் தொகுதியானதுரூபவ் இதயம்ரூபவ் சிறுநீர்ப்பைரூபவ் வயிறுரூபவ் குடல்ரூபவ் பாலியல் உறுப்புகள்
மற்றும் கண்களின் தொழிற்பாட்டினைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவானது இந்தப் பாகங்களினைப் பாதித்து
பின்வரும் அறிகுறிகளைக் காட்டக்கூடியது.
 குறைவான குருதிச் சக்கரை அளவினைக் கண்டறியும் திறனில் குறைபாடு (ஹைப்போகிளைசீமியா)
 சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுரூபவ் சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் சிறுநீர்
கழிப்பதைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை போன்ற சிறுநீரகம் சார்ந்த கோளாறுகள்
 கட்டுப்படுத்த முடியாத மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு
 குமட்டல்ரூபவ் வாந்திரூபவ் வீக்கம்ரூபவ் வயிற்றைக் காலியாக்கும் திறனில் குறைபாடு காரணமாக பசிக் குறைவு
 விழுங்குவதில் சிரமம்
 குறைவாக அல்லது அளவுக்கதிகமாக வியர்த்தல்

 உடல் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் சிரமம்
 வெளிச்சமான சூழலில் இருந்து இருட்டான சூழலுக்கு மாறும் போது கண்களைச் சரிசெய்து கொள்வதில்
சிரமம்
 ஓய்வாக இருக்கும் போது அதிகமான இதயத் துடிப்பினை உணருதல்
 உட்கார்ந்த நிலையில் அல்லது நின்று கொண்டிருக்கும் நிலையில் இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைதலும்
இதன் காரணமாக மயக்க நிலை தோன்றுதல் அல்லது உடல் மிதப்பதாக உணருதல்
 விறைப்புத்தன்மைரூபவ் யோனி வறட்சி மற்றும் பாலியல் தூண்டுதலுக்குக் குறைவான எதிர்ச் செயலைக்
காட்டுதல் போன்ற பாலியல் கோளாறுகள்
ராடிகியூலோபிளெக்சஸ் நியூரோபதி
ராடிகியூலோபிளெக்சஸ் நியூரோபதியானது தொடைகள்ரூபவ் இடுப்புரூபவ் பிட்டம் மற்றும் கீழ் மூட்டு
போன்றவற்றிலுள்ள நரம்புகளைப் பாதிக்கிறது. வகை 2 நீரிழிவுடையவர்களிலும் வயது முதிர்ந்தவர்களிலும்
பொதுவாகக் காணப்படுகிறது. இது நீரிழிவு அமியோட்ரோபி என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் அறிகுறிகளாவன பொதுவாக உடலின் ஒரு பக்கத்திலேயே தோன்றக் கூடியது. ஆயினும் உடலின்
மறுபக்கத்திற்கும் பரவக் கூடியதாகவும் உள்ளது. காணக்கூடிய அறிகுறிகளாவன:
 இடுப்புரூபவ் தொடை மற்றும் பிட்டத்தில் தோன்றும் தீவிரமான வலி. இது நாள் முழுவதும் தொடரக்
கூடியதாகும்.
 தொடையிலுள்ள தசைகள் பலவீனமாவதும் சுருங்கிப் போதலும்
 உட்கார்ந்து இருந்த பின் எழுந்து நிற்பது சிரமமாகும்
 வயிற்றில் ஏற்படும் வீக்கம்
 குறைந்து செல்லும் உடற் பருமன்
சில அறிகுறிகள் காலப் போக்கில் மேம்படுத்தப்படக் கூடியதாயினும்ரூபவ் இவ் அறிகுறிகள் மிகவும்
மோசமாகவும் தீவிரமாகவும் காணப்படும்.

மொனோநியூரோபதி
இது முகம்ரூபவ் உடல் மற்றும் கீழ் மூட்டுகளில் காணப்படும் குறித்த நரம்புகளைச் சேதப்படுத்துகிறது. நீரிழிவு
கொண்ட வயோதிபர்களிலே இது மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது. மொனோநியூரோபதியானது திடீரெனத்

தோன்றுவதுடன் மிகவும் தீவிரமான வலியை உண்டாக்கக் கூடியது. ஆயினும்ரூபவ் இந் நிலைமையானது பொதுவாக நீண்ட
கால விளைவுகளைக் காண்பிப்பதில்லை.
மொனோநியூரோபதியின் அறிகுறிகளாவனரூபவ் பாதிக்கப்பட்ட பாகத்தினைப் பொறுத்து வாரங்களாயினும்ரூபவ்
மாதங்களாயினும் சிகிச்சையின்றித் தானாகவே மறையக் கூடியதாகவுள்ளது. நோயாளிகளுக்குரூபவ் கால்ரூபவ் பின் முதுகு
அல்லது இடுப்புரூபவ் தொடையின் முற்பகுதிரூபவ் நெஞ்சு மற்றும் அடிவயிற்றில் வலியை உணரக் கூடியதாக இருக்கும்.
மொனோநியூரோபதியானது நரம்பு மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கக்கூடும்.
இதன் அறிகுறிகளாவன: கவனம் செலுத்துவதில் சிரமம்ரூபவ் இரட்டைப் பார்வைரூபவ் கண்களுக்குப் பின்னால் ஏற்படும் வலி
மற்றும் முகத்தின் ஒரு பக்கத்தின் முடக்கம் என்பனவாகும்.
சில சந்தர்ப்பங்களில் நரம்புகள் சுருக்கப்படுவதாலும் இந் நிலைமை தோன்றக்கூடும். மிகவும் பொதுவான
பிரச்சினையாக கார்பல் சுரங்க நோய்க்குறி காணப்படுகிறது. இந் நிலைமைரூபவ் கைகளிலும் சிறுவிரல் தவிர்ந்த
ஏனைய விரல்களிலும் விறைப்புத்தன்மை அல்லது கூச்சத்தை உண்டாக்கும். மேலும்ரூபவ் கைகளின் உறுதியான பிடியும்
பாதிக்கப்பட்டு கைகளிலுள்ள பொருட்கள் நழுவி விழுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
சிகிச்சை
நீரிழிவு நியூரோபதியானது குணப்படுத்த முடியாததொன்றாகும். ஆயினும்ரூபவ் அறிகுறிகளைக்
குறைப்பதற்கும் சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்வதற்கும் பின்வரும் 3 பிரதான வழிகளைக் கையாளலாம்:
 குருதிச் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல்
குருதிச் சக்கரையின் அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நியூரோபதியின்
அறிகுறிகள் மேம்படுத்தப்படலாம். நீரிழிவுச் சிகிச்சைக்குரிய இக் கட்டுப்பாடானது 4 முக்கியமான
முறைகளின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அவையாவன: கற்பித்தல்ரூபவ் உணவுக்கான ஒழுங்குமுறைரூபவ் உடற்
பயிற்சி மற்றும் சரியான அளவுகளில் மருந்து உட்கொள்ளுதல் என்பனவாகும்.
 சிக்கல் தன்மைகளைத் தவிர்த்துக் கொள்ளப் பாதங்களை நன்கு பராமரித்தல்
நியூரோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் பாதங்களில் பாதிப்பு ஏற்படும் பொழுதுகளில் எல்லாம்
வலியை உணருவதில்லை. அதனால்ரூபவ் பாதங்களைத் தொடர்ச்சியாகக் கவனித்துக் கொள்வதுரூபவ் தோலில் ஏற்படும்
வெடிப்புகள் மற்றும் புண்கள் போன்ற தொற்று அபாயத்தைக் கூட்டக் கூடிய மாற்றங்களை அவதானிக்க
உதவும்.

இதன் காரணமாக அவர்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் விரிவான பாதப் பரிசோதனையை மேற்கொள்ள
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும்ரூபவ் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை வைத்தியரை நாடும் பொழுதுகளில் பாதங்களை நேரடியாகப்
பரிசோதித்துக் கொள்வது சிறந்ததாகும்.

நாளாந்தம் பாதங்களைக் காயப்படுத்தக் கூடிய செயல்களைத் தவிர்ப்பதும்ரூபவ் நகங்களை நறுக்கும் வேளையில்
மிகக் கவனமாகச் செயற்படுவதும்ரூபவ் பாதங்களைக் கழுவித் தொடர்ச்சியாகப் பரிசீலித்துக் கொள்வதும்
மற்றும் பாதங்களுக்குச் சேதம் விளைவிக்காதவாறு வசதியான காலுறைகளையும் பாதணிகளையும் அணிந்து
கொள்வதும் அவசியமாகும்.
 நியூரோபதியால் உண்டாகும் வலியைக் குறைத்துக் கொள்ளுதல்
நியூரோபதியால் உண்டாகும் வலியிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்வது மிகவும் சிரமமானது
மட்டுமன்றி வாழ்க்கையின் தரத்தைப் பாதிக்கக் கூடியதாகும். இவ் வலியானது இரவு வேளைகளில் அதிகரித்து
உறக்கத்தினையும் பாதிப்படையச் செய்யும்.

டியுலொக்சடைன் மற்றும் ப்ரிகெபலின் போன்ற மருந்துகள் நீரிழிவு நியூரோபதியைக்
கட்டுப்படுத்தப் பயனுள்ளதாக இருக்கும். இதற்காகப் பயன்படுத்தக் கூடிய ஏனைய மருந்துகளாவன:
ஆமிட்ரிப்டலீன்ரூபவ் காபாபென்டின்ரூபவ் டிராமடோல் மற்றும் அல்பா லிபோயிக் அமிலம்
என்பனவாகும்.

தடுப்புமுறைகள்
நீரிழிவு நியூரோபதியைத் தடுத்துக் கொள்;ள நோயாளிகள் மேற்கொள்ள வேண்டியது: நீரிழிவு
மேலாண்மையை நன்றாகவும் திட்டமிடலின் மூலமும் பராமரித்துக் கொள்வதாகும்.
நீரிழிவு மேலாண்மையானது: குருதிச் சக்கரையின் அளவுரூபவ் இரத்த அழுத்தம்ரூபவ் கொழுப்பின் அளவு
என்பவற்றை குறித்த இலக்கை அடையும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும்.

சிறப்பான உணவுப் பழக்கத்தை நடைமுறைப்படுத்துவதல்ரூபவ் உடற் பயிற்சியை வழக்கப்படுத்துதல்ரூபவ் நீரிழிவு
எதிர்ப்பு மருந்துகளையும் வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட பிற மருந்துகளையும் தவறாமல்
உட்கொள்ளுதல்ரூபவ் உள்ளெடுக்கும் மதுபானத்தின் அளவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் புகைத்தலைத் தடைசெய்தல்
போன்ற செயன்முறைகளின் மூலம் இதனை அடைந்துகொள்ள முடியும்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன